ஸ்ரீ ராமர் துதி

Perumal-and-Raman-2-compressed

மனிதர்களின் மனம் சஞ்சலங்கள் நிறைந்தது. எல்லோருக்குமே இத்தகைய மன சஞ்சலங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதில்லை. இதனால் பலர் தாங்களாகவே தீய பழக்கங்களை கற்று கொள்கின்றனர். இப்பழக்கங்கள் நாளடைவில் அவர்களிடம் தீய குணங்களையும் ஏற்படுத்துகிறது. மிகுந்த மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே மனதை தூண்டும் எத்தகைய தீய சக்திகளையும் எதிர்த்து நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள முடியும். தீய பழக்கங்களை விட்டொழிக்கும் மனோதிடத்தை பெற நினைப்பவர்கள் “ஸ்ரீ ராமரின்” இந்த துதியை படிக்க வேண்டும்.

Lord-Rama

ஸ்ரீ ராமர் துதி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.

நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.

மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.

rama

- Advertisement -

“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளிலோ அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.

ramayanam

திருமாலின் ஏழாவது அவதாரமான “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” அயோத்தியின் அரசனான தசரத சக்கரவத்திக்கு மூத்த மகனாக இப்பூவுலகில் அவதரித்தார். பிறந்தது முதல் தனது அவதார நோக்கம் முடியும் வரை நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக வாழ்ந்தார் ஸ்ரீ ராமர். எத்தகைய துன்பங்கள் ஸ்ரீ ராமரின் வாழ்வில் வந்த போதும் தான் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்தார். அவரின் புகழ் பாடும் இந்த துதியை மனதார படிப்பதால் ஸ்ரீராமரின் அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri Ramar thuthi in Tamil. It is also called as Ramar mantra in Tamil or Ramar slokam in Tamil or Ramar slogam in Tamil