சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

Perumal-God
- Advertisement -

எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும் வகையிலான பணிகளை தினந்தோறும் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்து எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதே போல தொழில் செய்பவர்களுக்கும் எதிரிகளால் எந்த விதத்திலும் தொல்லையோ ஆபதோ வரலாம். வேண்டுபவர்களுக்கு தாமதிக்காமல் வந்து அருள் புரியும் தெய்வம் திருமால். அவரின் ஆயுதமான “ஸ்ரீ சக்ரம்” எனும் “சக்ரத்தாழ்வாரை” துதித்து வழிபடுவதால் அனைத்து தொல்லைகளும், ஆபத்தும் விலகும்.

சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

- Advertisement -

திருமாலின் ஸ்ரீ சக்கரமான சக்ரத்தாழ்வரை போற்றும் ஸ்லோகம் இது. திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிகிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், விஷ்ணு கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு முன்பு நின்று சக்ரத்தாழ்வாரின் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வந்தால் வாகனங்களில் செல்லும் போதோ அல்லது ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போதும் விபத்துகள் மற்றும் திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காக்கும். உங்களுக்கு தொழில், வியாபாரங்களில் தொல்லைகள், இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் அடங்கிபோவார்கள்.

Sudarshana vishnu

வைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக கருதப்பட்டு சக்ரத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இந்த சக்ரத்தாழ்வாரின் சுலோகம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அற்புத மந்திர சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை அடிக்கடி படித்து வருவது சிறந்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
காரிய தடை நீக்கும் விநாயகர் துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

English overview:
Here we have Chakrathalwar slokam in Tamil or Chakrathazhwar slokas in Tamil or Chakrathazhwar slogam Tamil. It is also called Chakrathalwar mantra in Tamil, Chakrathalwar slokam lyrics in Tamil or Sudharshana mantra in Tamil.

- Advertisement -