எத்தகைய நோயையும் போக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

Perumal-1-1
- Advertisement -

“நோயில்லா வாழ்வே குறையற்ற செல்வம்” என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனுக்கு உலகின் அனைத்து செல்வமும் அவனிடம் இருந்தாலும், அவனிடம் தீராத நோய் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அவனுக்கு அந்த செல்வங்களின் மீது அவ்வளவு ஈடுபாடு ஏற்படாது. அந்த வகையில் பெரும் அளவு பக்தர்கள் தங்கள் நோய் நீங்கவும், உடலாரோக்கியம் பெறவும் வந்து வழிபடும் “ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள்” கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Vaidya Veera ragava perumaltemple

இக்கோவில் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில், “திருவள்ளூர்” நகரில் அமைந்துள்ளது. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் “பல்லவ மன்னர்களால்” இக்கோவில் கட்டப்பட்டது என்றாலும் இக்கோவில் “5000” ஆண்டுகள் பழமை வாய்ந்தது என இங்கிருக்கும் சிலர் கூறுகின்றனர். முற்காலத்தில் இங்கு “சாலிஹோத்திரர்” என்ற முனிவர் வாழ்ந்து வந்த போது அவரது பக்தியை உலகிற்கு நிரூபிக்க விரும்பிய பெருமாள் ஒரு வழிப்போக்கன் வடிவில் அந்த முனிவரின் ஆசிரமம் வந்து அவரிடம் உணவு கேட்டார். தான் உண்பதற்கு மட்டுமே வைத்திருந்த உணவை அந்த வழிப்போக்கனுக்கு கொடுத்தார் சாலிஹோத்திரர்.

- Advertisement -

உணவை உண்ட பிறகு, தனக்கு தூக்கம் வருவதாகவும் தான் எங்கே உறங்க வேண்டும் என்றும் வழிப்போக்கன் வடிவிலிருந்த பெருமாள் கேட்டார். அப்போது அந்த வழிப்போக்கனுக்கு உறங்க தகுந்த இடத்தை காட்டி, அவரை உறங்கச் செய்து அவருக்கு விசிறியால் விசிறிக்கொண்டிருந்தார் சாலிஹோத்திரர். இவரின் விருந்தோம்பல் குணத்தைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் தனது நிஜ ஸ்வரூபத்தை அவருக்கு காட்டி, அவருக்கு பரமபத பதவி அளித்தார். இந்த நிகழ்வை குறிக்கும் வைகையில் இக்கோவில் மூலவரான வீரராகவ பெருமாளின் வலதுகையின் அடியில் சாலிஹோத்திர முனிவர் சிலை இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

Vaidya Veera ragava perumaltemple

பெருமாள் சாலிஹோத்திர முனிவரிடம் “எவ்வுள்”(எங்கு படுத்து உறங்குவது) என்று கேட்டதால் இவ்வூர் “திருஎவ்வுள்” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் “திருவள்ளூர்” என்று அழைக்கப்படலாயிற்று. அப்படி அந்த பெருமாள் படுத்திருந்த இடத்தில் தான் இன்று இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று அதிகளவு பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கி, இக்கோவிலின் குளத்தில் வெல்லத்தை கரைத்தும் இக்கோவிலின் சந்நிதியில் கல்லுப்பை நிவேதித்தும் பிராத்தனை செய்வதால் அவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெருகிர்து. ஆகையால் இக்கோவிலின் பெருமாளுக்கு “ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்” என்ற பெயர் உண்டானது.

- Advertisement -

Vaidya Veera ragava perumaltemple

ஒரு முறை “வடலூர் வள்ளலார்” பெருமான் இத்திருவள்ளூர் வீரராகவ சுவாமியின் கோவிலை கடந்து சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வகையிலும் அந்த வலி குறையாத போது தனது ஞானதிரிஷ்டியில் அந்த வீரராகவப் பெருமாளை தான் தரிசிக்காமல் செல்வதால், அந்த பெருமாள் தனக்கு வயிற்று வலி உண்டாக்கி தான் மேற்கொண்டு பயணிக்காதவாறு தன்னை தடுப்பதாக உணர்ந்தார். வள்ளலார் உடனே வீரராகவர் கோவிலுக்குள் சென்று அவர் மீது ஒரு பாடலைப் பாடினார். இதனால் மனம் குளிர்ந்த வீரராகவப் பெருமாள் வள்ளலாருக்கு தான் ஏற்படுத்திய வயிற்று வலியை நீக்கினார். உடல் பிணியை நீக்கும் பரிகார தலமாக கருதப்படும் இக்கோவில் திருவள்ளூர் மாவட்டதின் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற இதைச் செய்தால் போதும்

English Overview:
Here we described about Vaidya veeraraghava perumal temple in thiruvallur. This temple is very famous in near by areas. If one go this temple then he get cure from all his disease.

- Advertisement -