திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற இதைச் செய்தால் போதும்

tirupathi-thirupam

மனிதர்களாகிய நாம் வாழும் இந்த வாழ்க்கைக் காலம் முழுவதும் பல விதமான இன்ப, துன்ப அனுபவங்களைப் பெறுகிறோம். அதில் பெரும்பாலானோருக்கு பிரதான பிரச்சனையாக இருப்பது பொருளாதார நிலையைப் பற்றிதான். அந்த பொருளாதார நிலை உயர என்ன தான் ஒருவர் கடினமாக உழைத்தாலும் இறைவனின் அருளும் ஒருவருக்கு அவசியமாகிறது. அந்த வகையில் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் பொருள்செல்வ நிலை உயர வழிபட செல்வது “கலியுகக் கடவுளான” “திருப்பதி திருமலை ஏழுமலையனுடைய” கோயிலிற்கு தான். அப்படி அந்த “ஏழுமலைவாசனை” சரியான முறையில் வழிபட்டு சிறந்த பலனை பெரும் வழிமுறையைப் பற்றி இங்கு காண்போம்.

Perumal

இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரு அவசர தன்மை காரணமாக திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் பெரும்பாலானோர் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புகின்றனர். அந்த வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் அந்த வெங்கடேசனின் மனதில் என்றென்றும் வீற்றிருக்கும் நாயகியாகிய பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். ஆகையால் முதலில் அந்த தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று உங்கள் வாழ்வின் பொருளாதார நிலை உயர அந்த பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ளவேண்டும். இப்படி இந்த பத்மாவதி தாயாரிடம் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

பிறகு அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். அப்படி நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாகவும் மலைக்கு செல்லலாம். அந்த புனிதமான ஏழுமலைகளை கடந்து திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான “ஸ்ரீ ஆதி வராகர்” ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும்.

Lord Perumal

இதற்கு பிறகு திருமலையில் கோவில் கொண்டிருக்கும் “ஸ்ரீனிவாசனை” தரிசிக்க செல்ல வேண்டும். அப்படி அந்த வெங்கடேஸ்வரனை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்து தெரிவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருச்சானூரில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரின் சிபாரிசை அந்த பெருமாளும் ஏற்றுக்கொண்டு, தன்னை மலை போல நம்பி மலை மீது ஏறி வரும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அவர் போக்கி அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே:
பெருமாளின் தமிழ் மந்திரம்

English Overview:
Here we described how we need to worship Thirupathi Perumal in Tamil. If we worship Lord Perumal in a proper way then we can get his full blessings.