உங்களுக்கு விபத்துகள் ஏற்படமால் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்

murugan

நம்மையும் தீமையும் கலந்தது தான் உலகம். இந்த உலகத்தில் சிறிதளவு தீமை இல்லாமல் நற்காரியங்களை கூட செய்ய முடிவதில்லை என்பது சான்றோர்களின் வாக்காகும். எனினும் நாம் நாம் முடிந்தளவு நன்மைகள் அதிகம் உள்ள செயல்களை செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படி நாம் செயல்படுகிற போது அந்த காரியங்களில் தடை மற்றும் சிலருக்கு வீண் கவலைகள், தயக்கங்கள் ஏற்படுகிறது. அவற்றை எல்லாம் நீக்கும் ஸ்ரீ வேல் காயத்ரி மந்திரம் இதோ.

Lord Murugan

ஸ்ரீ வேல் காயத்ரி மந்திரம்

ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

Lord Murugan Vel

தீமைகள் அனைத்தையும் ஒரு சேர அழிக்கும் கந்தனாகிய முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் எனும் வேலாயுதத்திற்கான காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முருகப்பெருமானை மனதில் நினைத்து துதித்து வர நன்மைகள் உண்டாகும். முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சந்நிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதிப்பவர்களுக்கு வீண் கவலைகள், அச்சங்கள், தயக்கங்கள் அனைத்தும் நீங்கும். துஷ்ட சக்திகள், மாந்திரீக ஏவல்கள் உங்களை அணுகாது. காரிய தடை, தாமதங்கள் நீங்கும். எதிர்பாரா விபத்துகளை தடுக்கும்.

murugan

- Advertisement -

நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே. கந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம் என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும். முற்காலங்களில் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இன்ன பிற உயிர்களுக்கு பல விதமான துன்பங்களை தந்தனர் அசுரர் குலத்தினர். அவர்களை அழிப்பதாற்காக தோன்றியவர் முருகப்பெருமான், அவர் ஏந்திரியிருக்கும் வேல், தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துகிறது.

இதையும் படிக்கலாமே:
எண்ணங்கள் ஈடேற மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri vel gayathri manthram in Tamil. It is also called as Gayatri mantras in Tamil or Murugan mantras in Tamil or Vel mantra in Tamil or Muruga peruman manthirangal in Tamil.