உங்களின் எண்ணங்கள் நிறைவேற, வாழ்க்கை சிறக்க இதை துதியுங்கள்

siva-peruman

எண்ணங்களால் உருவாக்கப்பட்டவனாக மனித இனம் இருக்கிறது. எண்ணங்களில் நல்லவை மற்றும் தீயவை என்று இருவகை உண்டு. இதில் நாம் நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தாலும், அவை எல்லாமே நிறைவேறிவிடுவதில்லை. நமது விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேற இறைவனின் அருளும் நமக்கு இன்றியமையாததாகிறது. அதற்கான ஒரு சக்தி வாய்ந்த சிவன் துதி தான் இது. இந்த சிவன் துதி ஜெபிப்பதால் உண்டாகும் மேலும் பல நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sivan temple

சிவன் துதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ
மங்கலாய பிங்களாய ஓம் நமஹ

sivan

உயிர்கள் அனைத்தையும் காப்பவரான சிவ பெருமானுக்குரிய சிவ துதி இது. இந்த துதியை தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும், சிவனை மனதில் நினைத்து 27 முறை இந்த துதியை பாராயணம் செய்வது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற தினங்களில் சிவாலயங்களுக்கு சென்று இத்துதியை 108 முறை அல்லது 1008 முறை பாராயணம் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். காரிய தடை தாமதங்கள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

nanda-sivan-viratham

- Advertisement -

படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற இயற்கையின் நீதியை கடைபிடிப்பவர் இறைவனாக கருதப்படுகிறார். இந்த முத்தொழில்களையும் தொடர்ந்து செய்பவரும், தமிழர்களின் ஆதி இறைவனாக இருப்பவருமான சிவ பெருமான் செய்கிறார். சிவனை கருணாமூர்த்தி என்று பலர் அழைக்கின்றனர். ஏனெனில் தன்னை நோக்கி தவமிருந்து வழிபாடு செய்யும் பக்தருக்கு அவர் சுலபத்தில் அருள்புரிகிறார். அவருக்குரிய இந்த ஸ்துதியை துதிப்பதால் நமக்கு நன்மைகள் பல உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sivan sthuthi in Tamil. It is also called as Pingala mantra in Tamil or Sivaperuman slokam in Tamil or Ninaithathu nadakka manthiram in Tamil or Sivaperuman manthiram in Tamil.