டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறை. வரலாற்று சாதனை வெற்றி படைத்த இலங்கை அணி. ஆட்டநாயகன் குசால் பெரேரா 10ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் குவித்து சாதனை.

Kusal

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 13ஆம் தேதி துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களை குவித்தது.

Steyn 1

பிறகு தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இலங்கை அணி 191 ரன்களை குவித்து 44 ரன்கள் பின்தங்கியது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 259 ரன்களை குவித்து 303 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 304 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் இலங்கையின் தோல்வி உறுதி என்று நினைத்த நிலையில் தனியொருவனாக போராட துவங்கினார் குசால் பெரேரா. ஒருபுறம் பவுலர்களை நிறுத்தி அதிரடியாக ஆடிய பெரேரா 200 பந்துகளில் 153 ரன்களை குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

Kusal Perera

இவரின் இந்த அபார ஆட்டம் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வெற்றி அனைத்து கால பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. 10ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்களை குவித்து நம்பமுடியாத வெற்றியை பெற்று தந்தது இந்த ஜோடி.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : உதவிக்கரம் நீட்டிய சேவாக் – சேவாக்கின் செயலால் குவியும் பாராட்டு. இவரைப்போன்று நாட்டிற்கு ஏதாவது செய்யுங்கள் – ரசிகர்கள் ஆதங்கம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்