புல்வாமா தாக்குதல் : உதவிக்கரம் நீட்டிய சேவாக் – சேவாக்கின் செயலால் குவியும் பாராட்டு. இவரைப்போன்று நாட்டிற்கு ஏதாவது செய்யுங்கள் – ரசிகர்கள் ஆதங்கம்

Sehwag

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

Sehwag

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரரான சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் சேவாக் செய்த விடயம் நம் அனைவர்க்கும் அவர் ஒரு முன்னோடி என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சேவாக்கின் பதிவில் : நாட்டின் உண்மையான வீரர்களே நான் இப்போது எது செய்தாலும் உங்களின் இழப்பிற்கு ஈடாகாது. ஆனால்,நான் உங்களின் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச கல்வியினை என்னுடைய பள்ளியில் அவர்களுக்கு நிச்சயம் அளிப்பேன். என்று பதிவிட்டு தனது பள்ளியின் முகவரியினையும் அதில் இணைத்துள்ளார். இதோ அந்த பதிவு :

சேவாக்கின் இந்த பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த பதிவு சமூக வலைதளத்தில் அதிக அளவு பகிரப்படும் வருகிறது.

இதையும் படிக்கலாமே :

பிராத்தனைக்கான நேரம் இது : பரிசளிக்கும் நேரம் இல்லை புல்வாமா தாக்குதல் பாதிப்பில் நாடு இருக்கிறது. பரிசளிப்பு விழா முக்கியமில்லை. தள்ளிவைத்த விராட் கோலி – அஞ்சலி செய்ய வேண்டுகோள்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்