- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பட்டுப் புடவையில் உள்ள கறைகளை நீக்க உதவும் டிப்ஸ்.

பட்டுப் புடவையில் உள்ள கறைகளை நீக்க உதவும் டிப்ஸ்.

- Advertisement -

பெண்கள் என்றாலே அவர்களுக்கு புடவை மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பட்டுப் புடவை என்று சொன்னால் கேட்கவே வேண்டாம். திருமணங்கள், விசேஷங்கள் என்று எதற்கெடுத்தாலும் பட்டுப் புடவையை கட்டும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி கட்டிக்கொண்டு இருக்கும் பொழுது அதில் ஏதாவது கரைகள் ஏற்பட்டு விட்டால் அதை எளிதில் நீக்க முடியாமல் மறுபடியும் அந்த புடவையை கட்டுவதற்கும் மனமில்லாமல் வருத்தப்படுவார்கள். இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் அப்படிப்பட்ட கறைகளை நீக்க உதவும் டிப்ஸ் தான் பார்க்கப் போகிறோம்.

ஆசை ஆசையாக இந்த கலர் தான் வேண்டும். இந்த பாடர் தான் வேண்டும் என்று பார்த்து பார்த்து வாங்கும் புடவை தான் பட்டுப்புடவை. வருடத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது பட்டுப் புடவையை பெண்கள் கட்டிவிடுவார்கள். அவ்வாறு கட்டும் பொழுது தங்களை அறியாமலேயே சில கறைகள் பட்டுப்புடவையில் ஏற்பட்டுவிடும்.

- Advertisement -

சாதாரண புடவையாக இருந்தால் அதை துவைத்து பிரஷ் போடுவது என்று பல வழிகளில் முயற்சி செய்யலாம். ஆனால் பட்டுப் புடவைக்கு அந்த மாதிரி நம்மால் எதுவும் செய்ய முடியாது மிகவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படக்கூடியது அல்லவா? சரி இப்பொழுது பட்டுப் புடவையில் இரத்தக் கறை, காபி, டீ போன்ற கறைகள் பட்டால் அது எளிதில் போகாது. அப்படிப்பட்ட கறைகளை நீக்குவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

ரத்தக் கறைகள் ஏதாவது பட்டுப்புடவையில் ஏற்பட்டு விட்டால் மறுபடியும் அந்த பட்டுப்புடவையை நம்மால் கட்டவே முடியாது. அதையும் மீறி கட்டினாலும் அது அசிங்கமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்று ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீர் ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஐஸ் கட்டிகளை தண்ணீரில் போடுங்கள். தண்ணீர் சிறிது குளிர்ச்சி ஆனதும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு காட்டன் துணியை எடுத்து அந்த தண்ணீரில் தொட்டு கறை இருக்கும் இடத்தில் மட்டும் அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறு நாம் தேய்க்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய இரத்த கறையானது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இப்படி செய்யும் பொழுது உப்பு தண்ணீரானது பார்டரில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வழி ஒன்று இருக்கிறது. இதற்கு பியர்ஸ் சோப்பு தேவைப்படும். உடலுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சோப்பை வைத்து நாம் நம்முடைய பட்டுப்புடவையில் இருக்கும் கறையை எளிதில் நீக்க முடியும். இதற்கும் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். கறை இருக்கும் இடத்தில் லேசாக நினைத்து விட்டு இந்த சோப்பை அதன் மேல் நுரை வரும் அளவிற்கு தேய்த்து விட வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து தேய்க்கும் பொழுது அதில் இருக்கும் கரையானது படிப்படியாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: அயன் பாக்ஸ் கரண்ட் இல்லாம துணியை அயன் பண்ணும் புதிய டெக்னிக்.

இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி நாம் ஆசை ஆசையாக எடுத்த பட்டுப்புடவைகளில் இருக்கும் கறைகளை நீக்கி கட்டாத புடவைகளை கட்டுவோம்.

சற்று முன்