- Advertisement -
Homeஜோதிடம்வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamilபணவரவை அதிகரிக்கும் செடி

பணவரவை அதிகரிக்கும் செடி

- Advertisement -

பணம் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு மனிதரை கூட இன்றைய காலக்கட்டத்தில் பார்க்க முடியாது. ஒரு காலக்கட்டத்தில் பணம் வாழ்வதற்கான ஒரு காரணியாக மட்டுமே பார்க்கப்பட்டது. இன்று அப்படி கிடையாது பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு மாறி விட்டது. இதில் யாரை சொல்லியும் குற்றமில்லை சூழ்நிலை அப்படி உள்ளது.

இந்த பணத்தை சம்பாதிக்க ஒவ்வொருவரும் படும் பாட்டை சொல்லில் சொல்லி மாறாது. இரவு பகல் பாராமல் ஊர் ஊராக சென்று வேலை பார்க்கிறார்கள். இன்னும் எவ்வளவோ இந்த பணத்திற்காக பாடுபடுகிறார்கள். அப்படி இருப்பினும் எல்லாராலும் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

- Advertisement -

இந்த முயற்சியுடன் சில வாஸ்து முறைகளையும் நாம் பின்பற்றும் போது நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்றும் பணவரவு அதிகரித்து பணம் கையில் தாங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று வாஸ்து குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவிற்கு வளர்க்க வேண்டிய செடி

பண வரவிருக்கும் வாஸ்துவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் ஒவ்வொரு வீடு கட்டப்படும் போதும் வாஸ்துவிற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாஸ்து சரியாக அமையாத வீட்டில் பல பிரச்சனைகள் சந்திப்பதை நாமும் கண்கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த பதிவில் நாம் பண வரவிற்கு வீட்டில் வளர்க்க வேண்டிய ஒரு செடியை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த செடிக்கு நேர்மறை ஆற்றல் அதிகம் உண்டு என்றும் பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

பண வரவை தாராளமாக அள்ளித் தரக் கூடிய அந்த செடி ஜேட் செடி (jade plant). இந்த வகை தாவரங்களை இன்று பலரும் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் இது வெறும் அழகிற்கான தாவரம் என்று தான் வளர்க்கிறார்கள். ஆனால் இதற்கு பண ஈர்ப்பு தன்மை அதிகம் உண்டு.

- Advertisement -

பொதுவாக தாவரங்கள் அனைத்தும் சீரான சுவாசத்திற்கு துணை புரியும். சில தாவரங்கள் மருந்தாகவும் சில தாவரங்கள் உணவாகவும் பயன்படுகிறது. அதில் சில தாவரங்கள் மட்டும் தான் இது போன்ற வாஸ்து ஆன்மீக குறிப்புகளுக்கு பயன்படுகிறது.

அந்த வகையில் மணி பிளான்ட், துளசி, கற்றாழை போன்ற செடிகளை நாம் வீட்டில் வளர்ப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இன்றி நாம் அறிந்திடாத இன்னும் பல செடிகளும் உண்டு. அந்த வகையில் ஜேட் செடிக்கு பணம் இருப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த செடி வீட்டின் உள்ளே நுழையும் போது வலது பக்கத்தில் இருக்கும் படி வைப்பது மிகவும் நல்லது. அதே போல் அலுவலகத்தில் தென்மேற்கு திசையில் வைப்பதால் அதிக அளவு நேர்மறை ஆற்றல் பெருகும். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இதை வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைப்பது மிகவும் சிறந்தது. இதை தெற்கில் வைப்பதை தவிர்த்து விட வேண்டும். இந்த செடியை நாம் வீட்டில் வளர்ப்பதனால் நம்முடைய பணப்பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என்று நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன் மனமும் தெளிவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மனவேதனை நீங்க சிவ வழிபாடு

இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஜேட் செடியை நம்பிக்கை இருப்பின் நீங்களும் வீட்டில் வாங்கி வந்து வைத்து வளர்த்து நல்ல பலனை அடையலாம்.

சற்று முன்