வருடா வருடம் கருவறையை நோக்கி தானாக நகரும் அதிசய கல். ஆச்சர்யத்தில் பக்தர்கள்

hasan devi temple

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் நிகழும் அதிசயங்களை பார்க்கையில் கலியுகத்திலும் கடவுள் மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த வகையில் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஒரு கோவிலில் எண்ணிலடங்கா பல அதிசயங்கள் நிகழ்கிறது. வாருங்கள் அந்த கோவிலை பற்றி பார்ப்போம்.

hasanamba temple

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ளது ஹசனாம்பா கோவில். வருடா வருடம் தீபாவளி அன்றும் அதற்கு அடுத்தனாலும் தான் இங்கு மக்கள் வழிபடுவதற்கு அனுமதி உண்டு. அதன் பிறகு கோவில் நடைசார்த்தப்பட்டு மீண்டு அடுத்த ஆண்டு தான் திறக்கப்படும்.

ஓராண்டு கழித்து ஆலயம் திறக்கப்படும்போது முந்தைய ஆண்டு தேவிக்கு வைத்த சந்தனம், குங்குமம் அப்படியே இருப்பதாகவும், நிவேதனமாக வைத்த அரிசி கெடாமலும், நந்தா விளக்கான நெய் விளக்கு எரிந்து கொண்டிருப்பதையும் கண்டு பக்தர்கள் பரவசப்படுகின்றனர்.

hasanamba

இந்த கோவிலில் ஒரு அதிசய கல் உள்ளது. அந்த கல் வருடா வருடம் அம்மனை நோக்கி ஒரு இன்ச்(inch) நகர்ந்து செல்கிறது. இந்த கல்லிற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு.

hasanamba kovil

இங்குள்ள அம்மனை வணங்க ஒரு பெண் வந்துள்ளாள். அப்போது அவளை பின் தொடர்ந்து வந்த அவளின் மாமியார், வீட்டில் வேலை இருக்கும் சமயத்தில் கோவிலுக்கு வந்து என்ன செய்கிறாய் என அவளை அடித்திருக்கிறார். அந்த பெண் அழுதுகொண்டே வலிதாங்காமல் அம்மனை வேண்ட, அம்மன் அவளை கல்லாக மாற்றிவிட்டாளாம். அதனால் இந்த கல்லுக்கு மாமியார் மருமகள் கல் என்று பெயர்.

வருடா வருடம் இந்த கல் அம்மனை நோக்கி எப்படி நகர்ந்து செல்கிறது, எதற்காக நகர்கிறது, இது அம்மனை அடைந்தாள் என்னவாகும் என்பதெல்லாம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.