ஸ்டோர் ரூம் வாஸ்து விதிமுறைகள்

store-room-vastu

இக்காலங்களில் புதிய வீட்டு மனையை வாங்கி அதில் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை கொண்டு சொந்த வீடு கட்டுகின்றனர். அவ்வீட்டில் தங்களுக்கு பிறந்த சந்ததிகள் வழிவழியாக வாழ அந்த வீட்டில் பல புதுமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். இப்படி எதிர்கால தேவையை அறிந்து வீட்டை கட்டும் போது, “ஸ்டோர் ரூம்” எனப்படும் கிடங்கு அறை அல்லது பொருட்கள் வைக்கும் அறை வைத்து பலரும் கட்டுகின்றனர். இந்த ஸ்டோர் ரூம் எந்த திசையில் இருந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.

வீடு என்றாலே அதில் வாழ்பவர்கள் தாங்கள் வாழும் காலங்களில் பல வகையான பொருட்களை வாங்கி சேகரிப்பார்கள். இவற்றில் பல அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாகவும், சில எப்போதாவது உபயோகிக்கும் பொருட்களாகவும் இருக்கிறது. இத்தகைய பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் பத்திரமாக வைக்க வீட்டில் “ஸ்டோர் ரூம்” எனப்படும் பொருட்கள் வைக்கும் அறை வைத்து வீடு கட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது அந்த வகையில் வீட்டில் ஸ்டோர் ரூம் எங்கே அமைத்தால் வீட்டிற்கு நன்மைகள் உண்டாகும் என்பதை காணலாம்.

ஈசானிய மூலை – ஈசானிய மூளை என்பது ஈசன் ஆதிக்கம் மிகுந்த மூலையாகும். இந்த மூலையில் ஸ்டோர் ரூம் அமைத்து அங்கு சாமான்களை வைப்பதால் வீட்டில் பொருளாதார குறைவு ஏற்பட வழிவகுக்கும். வடக்கு மூலையில் ஸ்டோர் ரூம் அமைத்தால் வீட்டின் வாஸ்து பலத்திற்கு பங்கம் ஏற்படுத்தி, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன்கள் அதிகம் ஏற்படாமல் செய்து விடும்.

store room

நைருதி மூலை – நைருதி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட இந்த மூலையில் ஸ்டோர் ரூம் அமைப்பதால் வீட்டில் வளங்கள் பெருகும். வசிப்பவர்களின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரத் தொடங்கும். வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஸ்டோர் ரூம் அமைப்பதால் வீட்டில் வறுமை நிலை உண்டாகாது. தனம் மற்றும் தானியங்களின் சம்பத்து உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
தெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Store room vastu in Tamil. It is also called Store room vastu tips in Tamil or Vastu store room in Tamil or vastu araigal in Tamil and also Nairuthi moolai in Tamil.