தெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்

vastu

நாம் கட்டும் வீடு என்பது நாம் வசிப்பதற்காக மட்டுமல்லாமல், நம்முடைய காலத்திற்கு பின்பு நமது சந்ததியினரும் வசிப்பதற்காக தான். இன்று அனைவருமே புது வீட்டை கட்டும் போது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றியே கட்டுகின்றனர். அவர்களில் பலரும் “தென் திசை” நோக்கி வீடுகளின் தலைவாயில்களை அமைப்பதிலும், அத்திசை நோக்கி இருக்கும் வீடுகளில் வசிப்பதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தில் தென் திசை நோக்கி கட்டப்படும் வீடுகளால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தெற்கு திசை என்பது “அஷ்டதிக்” பாலகர்களில் “எம தர்மன்” வீற்றிருக்கும் திசையாகும். நவகிரகங்களில் போர்கிரகமான “செவ்வாய்” பகவானுக்குரிய திசையாகும். நீத்தார் கடன் எனப்படும் பித்ருக்கள் அல்லது முன்னோர்கள் வசிக்கும் பித்ரு லோகம் தென்திசையில் இருப்பதாக ஐதீகம். எனவே இத்திசையை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஆயுளை தீர்மானிக்கும் எமன், பூமிகாரகன் மற்றும் நோய்களிலிருந்து காக்கும் சக்தி கொண்ட செவ்வாய், எப்போதும் நமது மேன்மையை விரும்பும் மறைந்த நமது முன்னோர்கள் ஆகிய மூன்று சக்திகளின் ஆசிர்வாதங்களும் தென்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது.

பொதுவாக வாஸ்து பற்றி அதிகம் அறியாதவர்கள் கூட தெற்கு திசை பார்த்தவாறு வீட்டின் தலைவாயிலை அமைப்பதையோ அல்லது அத்தகைய வீடுகளில் வசிப்பதையோ தவிர்க்கின்றனர். தெற்கு திசைகளை நோக்கியவாறு வீடுகளின் தலைவியிலை அமைப்பதாலும், அந்த திசையை நோக்கிய வீடுகளில் குடியிருப்பதாலும் எம தர்மனின் ஆசிகள் கிடைத்து வசிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும். திடீர் விபத்துகள், தீராத நோய்கள் போன்றவை ஏற்படாது. எதிரிகள் ஏற்படாத வண்ணம் காக்கும்.

police

ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தெற்கு திசையை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்கள் அமைத்து கொள்வதும், தென் திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பதும் நன்மைகளை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானுக்குரிய திசையாக தென் திசை இருப்பதால் இத்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்கள் எதற்கும் அஞ்சாத தைரியம் மிக்கவர்களாகவும், நீண்ட காலம் பாதிக்கும் நோய்கள் ஏதும் பாதிக்காத வகையிலும் வாழ்வார்கள்.

- Advertisement -

chevvai

மேஷம், விருச்சிகம் மற்றும் செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகரம் ராசிக்காரர்களும் தென்திசை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்களை அமைத்து கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஜாதகத்தில் செவ்வாய் 6, 8, 12 போன்ற இடங்களில் இருப்பவர்கள் தென்திசையில் தலைவாயிலை அமைப்பதையும், அத்திசையை நோக்கிய வீடுகளில் வசிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் செல்வம் சேர இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for South facing house in Tamil. It is also called as South facing house vastu tips in Tamil. Therku partha veedu vastu in Tamil