- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்சமையல் செய்யும் பொழுது பொங்கி வழிந்து கவனக்குறைவால் கேஸ் ஸ்டவ் நாசமாகிவிட்டதா? ஸ்டவ் முதல் பர்னர்...

சமையல் செய்யும் பொழுது பொங்கி வழிந்து கவனக்குறைவால் கேஸ் ஸ்டவ் நாசமாகிவிட்டதா? ஸ்டவ் முதல் பர்னர் வரை ரொம்ப ஈசியாக சுத்தம் செய்வது எப்படி?

- Advertisement -

எல்லா சமயங்களிலும் சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்க முடிவது கிடையாது. சில சமயங்களில் கவனக் குறைவால் சமையல் செய்யும் பொருட்களை பொங்கி வழிய விட்டு விடுகிறோம். இதனால் நமக்கு இரட்டிப்பு வேலை ஆகி விடுகிறது. அப்படியான இந்த சமையல் கறைகளை ஸ்டவ்லிருந்து ரொம்ப எளிதாக நீக்குவது எப்படி? அது மட்டும் அல்லாமல் பர்னரை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சமையல் செய்யும் பொழுது அடுப்பிற்கு அருகிலேயே இருப்பது நல்லது. அடுப்பை விட்டு நீங்கள் நகர போகிறீர்கள் என்றாலே அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு செல்வது உசிதமானது. அப்படி மறந்து அப்படியே விட்டுவிட்டு போய்விட்டால் அடுப்பில் எதை வைத்திருக்கிறீர்களோ, அது கொட்டி அடுப்பையே நாசம் செய்து விடும். இது அடுப்பை மட்டும் அல்லாமல் பர்னருக்குள் சென்று தீ எரிவதின் வேகத்தையும் குறைத்து விடும். இதனால் கேஸ் வீண் ஆவது அதிகரிக்கும்.

- Advertisement -

குறிப்பாக பால் பொங்கி வழிவது அல்லது டீ பொங்கி வழிவது போன்ற விஷயங்கள் மிகுந்த வேலையை கொடுக்கும். டீ பொங்கி வழிந்து விட்டால் அவ்வளவு தான் அப்படியே விடாப்பிடியான கறையாக ஒட்டிக் கொண்டு விடும். டீ துகள்கள் அனைத்தும் பர்னருக்குள் சென்று பர்னரையும் நாசம் செய்து விடும். நாட்பட நாட்பட இதை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் கேஸ் அதிகமாக வீணாகும்.

ஒரு முறை எதையாவது கொட்டி விட்டால் உடனே அதை துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். பால், தேநீர், காபி அல்லது குழம்பு ஏதாவது கொட்டிவிட்டால் உடனே பாத்திரத்தை வேறு ஒரு பர்னருக்கு மாற்றி விட்டு உங்களிடம் பழைய கெட்சப்புகள் இருந்தால் அதை போட்டு லேசாக ஸ்கிரப்பரால் தேய்த்துக் கொடுங்கள். சோப்பு போடுவதை விட கெட்சப் போடும் பொழுது ரொம்ப எளிதாக கறைகள் நீங்கும்.

- Advertisement -

பழைய கெட்சப்புகள் இதற்கு ரொம்பவே உதவி செய்யக் கூடியதாக இருக்கும், எனவே அவற்றை தூக்கி போடாமல் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பர்னரை சுத்தம் செய்ய ரசத்திற்கு வைக்கும் புளியை தூக்கி போடாமல் சேகரித்து வாருங்கள். அந்த புளி கரைசலில் பர்னரை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்து பேக்கிங் சோடா அல்லது வினிகர் ஊற்றி தேய்த்தால் சுலபமாக அழுக்குகள் அனைத்தும் நீங்கி பர்னர் புதிது போல பளிச்சிடும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதை ரெடி பண்ணி வைச்சிட்டா போதும். பித்தளை செம்பு பாத்திரங்களை தேய்க்க பீதாம்பரி பவுடரை காசு கொடுத்து வாங்க வேண்டாம்.

பர்னர் புதிதாக மின்ன எளிய வழி ஒன்று உண்டு. ஹார்பிக்கை பர்னரின் மீது ஊற்றி ஒரு பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். இதில் அதிகமான கெமிக்கல் இருப்பதால் பயன்படுத்தும் பொழுது கையுறை மற்றும் மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. ஊறிய பின்பு பழைய டூத் பிரஷ் வைத்து லேசாக தேய்த்து கொடுத்தால் போதும் பர்னரில் இருக்கும் விடாப்பிடியான கறைகள், அழுக்குகள் மற்றும் கருப்பு படிமங்கள் அனைத்தும் நீங்கி தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிக்கும். ஸ்டவ்வை சுத்தம் செய்ய மீந்து போன ஷாம்பூக்கள் மற்றும் டூத் பேஸ்ட்கள் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்பிரே கொண்டு துடைக்கும் பொழுது ஸ்டவ் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

சற்று முன்