வெள்ளை முடியை தடுக்க ஸ்ட்ராபெரி பழம் ஹெல்ப் பண்ணுமா? எலி வால் போன்ற முடியை கூட அடர்த்தியாக்கும் ஸ்ட்ராபெரி ரகசியம்!

white-hair-narai-strawberry
- Advertisement -

செக்க செவேலென சிவந்திருக்கும் இந்த ஸ்ட்ராபெரி மற்ற பழங்களை காட்டிலும் நிறையவே சத்துக்களை அடக்கியுள்ளது. ஸ்ட்ராபெரியில் ஏராளமான விட்டமின்களும், பொட்டாசியமும் நிறைந்து உள்ளன. விட்டமின் சி, விட்டமின் ஏ, மக்னீசியம், கெரட்டின் போன்றவையும் இதில் அதிகம் காணப்படுவதால் தலைமுடி பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமான தீர்வை கொடுக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். நம் தலை முடியில் இருக்கும் வெள்ளை முடியை கூட தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இந்த ஸ்ட்ராபெரி பழத்தின் ரகசியத்தை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் தலைமுடி பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது ஏற்கனவே தலைமுடி அதன் வலுவை இழந்தது தான் என்கின்றனர் தலை முடி சார்ந்த மருத்துவர்கள். எனவே டேமேஜ் ஆன இந்த முடியை முதலில் க்யூர் செய்ய வேண்டும். இதற்கு மூன்று ஸ்ட்ராபெரி பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து தலை முழுவதும் மசாஜ் செய்து தடவிக் கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து தலை முடியை சாதாரண ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடியின் பாதிப்புகள் படிப்படியாக சரியாகிவிடும். இதனால் ஆரோக்கியமான கேஷம் முதலில் உங்களுக்கு நிலைத்து நிற்கும்.

- Advertisement -

அதன் பிறகு அழுக்குகள் மற்றும் ரொம்பவும் தூசுகளால் நிறைந்துள்ள தலைமுடியை சுத்தம் செய்வதற்கு ஸ்ட்ராபெரியை இப்படியும் பயன்படுத்தலாம். நான்கு ஸ்ட்ராபெரி பழங்களை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தேய்க்க வேண்டும். அதன் பிறகு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் தலைமுடியை அலசினால் அழுக்குகள் எல்லாம் தலைமுடியில் இருந்து நீங்கி தலை நல்லதொரு சுத்தமான ஆரோக்கியத்தை அடையும்.

இப்பொழுது வெள்ளை முடிகளை தடுக்கவும், இளநரையை தவிர்க்கவும் ஸ்ட்ராபெரியை இப்படி பயன்படுத்தி பார்க்கலாம். ரெண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்ட்ராபெரி பழத்தை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்து இந்த விழுதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து தலை முழுவதும் தடவி ஊற விட வேண்டும். 15 நிமிடங்கள் ஊறவிட்டு பின் தலைக்கு சாதாரண தண்ணீரால் அலசி வந்தால் நரை முடி மாறிவிடும். முடி நரைக்க ஆரம்பிப்பவர்கள் இதை செய்தால் அந்த பிரச்சனையில் இருந்து வெகு சுலபமாக தப்பித்து விட முடியும்.

- Advertisement -

அபரிமிதமான முடி வளர்ச்சிக்கு மூன்று பழுத்த நல்ல ஸ்ட்ராபெரி பழங்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை மட்டுமே எடுத்து தனியாக சேர்க்க வேண்டும். வெள்ளை கரு தேவையில்லை. பிறகு நன்கு பீட் செய்து கலந்து விட வேண்டும்.

அதன் பிறகு இதை தலை முழுவதும் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு தலையை சாதாரண தண்ணீரை கொண்டு அலசினால் முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து முடியின் வளர்ச்சி நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அபரிமிதமாக இருக்கும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் அத்துணை சத்துக்களும் இத்துனூண்டு ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. நீங்களும் இதை பயன்படுத்தி பயனடையலாமே!

- Advertisement -