ஸ்ட்ரெஸ் அதிகமானதால தலையில் முடி அதிகமாக கொட்டுதா? வாரத்தில் ஒரு நாள் இந்த எண்ணெயை தலையில் மசாஜ் செய்து குளித்தால் முடி உதிர்வு உடனே நிற்கும்.

hair10
- Advertisement -

முடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தம் காரணமாக நிறைய பேருக்கு முடி உதிர்வு அதிகமாக காணப்படுகிறது. சரியாக தூக்கம் இல்லை, சரியான உணவும் இல்லை, வேலையில் பிரஷர். எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த மன அழுத்தம் அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும். ஸ்ட்ரஸை முழுமையாக குறைப்பதற்கு ஒரு சிறப்பான ஆயில் பாத் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு மட்டும் இந்த எண்ணெய் குளியல் கிடையாது.

தலையில் இருக்கும் பேன் பொடுகு அரிப்பு தொல்லையிலிருந்து விடுபட முடி உதிர்வை நிறுத்த, உடல் சூட்டை குறைக்க, முடியை உதிராமல் வளரச் செய்ய தேவையான அத்தனை நன்மைகளும் இந்த எண்ணெய் குளியலில் அடங்கியுள்ளது. இந்த எண்ணெய் குளியலுக்கு எண்ணெயை எப்படி தயார் செய்வது. எப்படி தலைக்கு அப்ளை செய்து குளிப்பது என்பதை பற்றிய குறிப்பை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

- Advertisement -

முதலில் இந்த எண்ணெயை தயார் செய்ய 2 லிருந்து 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பூண்டு – 1 பல்லு, சிறிய துண்டு – சுக்கு, இந்த நான்கு பொருட்கள் தேவை.‌ ஒரு சிறிய உரலில் பூண்டையும் சுக்கையும் போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி மிளகு, சீரகம், இடித்து வைத்திருக்கும் பூண்டு, சுக்குத்தூளை போட்டு இரண்டு நிமிடம் போல எண்ணெயை சூடு செய்து அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய் வெதுவெதுப்பாக சூடான பின்பு இந்த எண்ணெயை வடிகட்டிக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பாக நல்லெண்ணெய் இருக்கும்போதே இந்த எண்ணெயை தலையில் வேர்க்கால்களில் நன்றாக தடவி, 5 லிருந்து 7 நிமிடங்கள் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். தலை முடிக்குள் இரண்டு கைகளை விட்டு, தட்டி தட்டி ஸ்கேல்பில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதை பார்த்திருப்போம் அல்லவா அதே போல நம் தலையிலும் மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு நீங்களே இந்த எண்ணெயை மசாஜ் செய்து கொடுப்பதை விட, உங்களுடைய வீட்டில் யாராவது ஒருவர் இருந்தால் அவர்களை மசாஜ் செய்து கொடுக்கச் சொல்லுங்கள். அப்போது உங்களுடைய தலை பாரம் குறைந்து, ஸ்ட்ரெஸ் நிச்சயமாக குறையும். 15 நிமிடங்கள் எண்ணெய் தலையில் நன்றாக ஊறிய பின்பு, தலையை ஜென்டில் ஆன ஷேப்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

ஆண்கள் பெண்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எல்லோருக்குமே இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். 7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள். குழந்தைகளாக இருந்தால் வெகு நேரம் தலையில் இந்த எண்ணெயை ஊற வைக்காதீங்க. ஐந்து நிமிடம் தலையில் மசாஜ் செய்து விட்டு உடனடியாக தலைக்கு குளிப்பாட்டி விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த எண்ணெயை தலைக்கு வைத்து தலைக்கு குளித்து வர உடல் ஆரோக்கியம் பெறுவதோடு முடியும் நீளமாக வளரும். குறிப்பாக மன அழுத்தம் குறையும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -