- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவராத்திரி அன்று வாங்கிக் கொடுக்க வேண்டிய அபிஷேகப் பொருட்கள்

சிவராத்திரி அன்று வாங்கிக் கொடுக்க வேண்டிய அபிஷேகப் பொருட்கள்

- Advertisement -

நமக்கு பாக்கியம் இருந்தால் மட்டும்தான், இறைவனுக்காக நம் கையால் ஒரு பூவை கூட சூட்ட முடியும். அந்த வகையில் நீங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருந்தால் மட்டும்தான், இறைவனின் அபிஷேகத்திற்கு உங்கள் கையால் இந்த பொருளை வாங்கிக் கொடுக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

ஜோதிடமும் சாஸ்திரமும் சொல்லக்கூடிய விஷயங்கள் நமக்கு பல வகையில் நன்மை தரக்கூடியவை. யாருக்கு தெரியுமா. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இன்று சிவன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும் இந்த 2 பொருட்களை வாங்கி அபிஷேகத்திற்கு தானம் கொடுத்து தான் பாருங்களேன். உங்கள் வாழ்க்கை எப்படி இனிமையாக மாறுகிறது என்று, நீங்களே வாழ்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சிவன் அபிஷேகப் பொருள்

சிவராத்திரி சிவனுக்கு தானே சொந்தம். முருகனுக்கு எதற்காக அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று சிலர் சிந்திக்கலாம். சிவனும் முருகனும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றுதான். சிவன் கோவில்களில் சிவராத்திரி இரவு 4 கால பூஜை எப்படி நடக்கிறதோ, அதேபோல பழனி, திருச்செந்தூர், வடபழனி, முருகன் கோவில், இன்னும் சில பிரபல்யமான முருகன் கோவில்களிலும் சிவராத்திரி இரவு 4 கால பூஜை நடைபெறும்.

சில முருகன் கோவிலும், சிவராத்திரி இரவு திரிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி இருக்க நாம் எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் சிவபெருமானும் முருகனும் வேறு வேறு கிடையாது. முருகனும் சிவனும் ஒன்றுதான். இந்த இரண்டு அபரிவிதமான சக்தியையும் நாம் உணர வேண்டும் என்றால், இன்று 26-2-2025 இன்றைய தினம் சிவபெருமானையும் முருகரையும் ஒரு சேர வணங்க வேண்டும். ஒரு சேர அவர்களுடைய சக்தியை ஆழ் மனதில் உணர வேண்டும். இதுதான் இந்த சிவராத்திரி வழிபாட்டிற்கு உண்டான சிறப்பு.

- Advertisement -

சரி, அபிஷேகத்திற்கு அந்த இரண்டு பொருள் வாங்கி தர வேண்டும் என்று சொன்னீர்களே அது என்ன. இனிப்பு சுவை நிறைந்த “தேன்”, சிவன் கோவில் அபிஷேகத்திற்கு வாங்கிக் கொண்டு போய் உங்கள் கைகளால் கொடுத்தால், உங்கள் வாழ்வு இனிமையாக மாறும். கசப்பான கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும்.

அதேபோல சிவன் கோவிலில் நான்கு கால பூஜைக்கு, முருகன் கோவிலில் நான்கு கால பூஜைக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக வைக்கும் வழக்கம் இருக்கும், அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாவது கொடுப்பார்கள். அதற்கு “வெல்லம்” வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு.

- Advertisement -

அவ்வளவு எளிதில் இந்த 2 பொருளையும் கோவிலுக்கு யாராலும் வாங்கி தர முடியாது. மாதாமாதம் பிரதோஷம் வரும். அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுத்திருப்பீர்கள். என்றாவது தேன் வாங்கி கொடுத்திருப்பீர்களா. முருகனுக்கு கிருத்திகை, சஷ்டி திதி எல்லாம் வருகிறது. அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள், தேன் வாங்கி கொடுத்திருக்கிறீர்களா. சிந்தித்துப் பாருங்கள். நல்ல தேன் வாங்கி அபிஷேகத்திற்கு தானம் கொடுப்பது குடும்பத்திற்கு அத்தனை நல்லது.

எதற்காக பெரியவர்கள் எல்லாம் கோவிலுக்கு சென்றால் கல்கண்டு தானம் கொடுங்கள். சாக்லேட் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். இனிப்பு பண்டங்களை எந்த அளவுக்கு வாங்கி தானம் கொடுக்கின்றோமோ, அந்த அளவுக்கு நம்முடைய கெட்ட கர்மாக்கள் ஆனது குறைந்து கொண்டே செல்லும் என்பது சாஸ்திரத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற சிவராத்திரி தீப வழிபாடு

இன்று இரவு சிவராத்திரி. உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வெல்லமும் தேனும் உங்கள் கையால் வாங்கி கொடுக்க முடியுமா முயற்சி செய்துதான் பாருங்களேன். உங்களுடைய முயற்சி வெற்றி அடைந்தால் வாழ்க்கையிலும் நீங்கள் வெற்றி அடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்