இன்று தேய்பிறை சஷ்டி திதி. கடன் சுமையிலிருந்து வெளிவர, செய்ய வேண்டிய எளிய பரிகாரம். கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு பணம் மிக மிக அவசியம்தான். அதைவிட முக்கியமான விஷயம் நமக்கு இருக்கக்கூடிய திறமை. ஏதோ கெட்ட காலம், கடனை வாங்கி விட்டோம். ஆனால் அந்த கடனை திருப்பி சீக்கிரம் அடக்க வேண்டும் என்றால், சில பல வேலைகளை திறமையாக செய்ய வேண்டும்.
திறமையாக சிந்தித்து திறமையாக செயல்பட்டு, திறமையாக சம்பாதித்தால் மட்டுமே வாங்கிய கடனை கூடிய விரைவில் அடித்து அடைத்து விட்டு, நிம்மதியாக வாழ முடியும். பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கும் அந்த திறமையை, அந்த ஞானத்தை கொடுக்கக் கூடிய கடவுள் சுப்ரமணிய கடவுள்தான். சுப்ரமணியன், ஞானத்திற்கு அதிபதி என்று சொல்கிறார்கள்.
உங்களுக்கான ஞானமும் பிறக்க வேண்டும், கடனை திருப்பித் தர திறமையாக செயல்பட வேண்டும் என்றால், இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இன்றைய தினம் தேய்பிறை சஷ்டி திதி. கஷ்டங்கள் கரைவதற்கு உண்டான சஷ்டி திதி என்று வைத்துக் கொள்ளலாம். கடன் சுமை கரைவதற்கு உண்டான சஷ்டி திதி என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்று குருநாள். வியாழக்கிழமை. குபேரருக்கு உரிய கிழமை. பரிகாரம் செய்ய இதைவிட சிறப்பான நாள் கிடைக்காது.
கடன் தீர சுப்பிரமணியன் பரிகாரம்
ராஜகனி என்று எலுமிச்சம் பழத்தை சொல்கிறார்கள். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு, அதை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து, முருகா என் கடனை தீர்க்க ஒரு வழியைக் காட்டு என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
முருகன் பாதத்தில் இருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கையில் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு கண்களை மூடி ‘ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். அந்த எலுமிச்சை பழத்தை ஒரு பேப்பரில் வைத்து மடித்து கூட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம் தவறு கிடையாது. அந்த காகிதம் வெள்ளை காகிதமாக இருக்கட்டும்.
மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை 3 முறை சுற்ற வேண்டும். கடன் சுமை என்னை விட்டு விலக வேண்டும் முருகா என்று வேண்டிக் கொண்டு, இந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே கொண்டு போய் தூரமாக ஊருக்கு ஒதுக்கப்புறமாக போட வேண்டும். உங்கள் ஊரில் குப்பை எங்கே கொட்டுவார்கள் அந்த இடத்தில் கொண்டு போய் இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு விட்டு வரவும், எலுமிச்சம் பழத்தை தூர தூக்கி போட்டு விட்டு வந்து தான் பிறகு உங்களுடைய வீட்டில் நீங்கள் குளிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நாளை கார்த்திகைமாத வெள்ளிக்கிழமை வழிபாடு
குடும்ப தலைவன் குடும்பத்தலைவி யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டில் யாருக்கு நேரம் சரியில்லை என்றாலும், அவர்களுக்காக நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது. அவர்களுடைய தலையெழுத்து மாறும். உங்களுக்கே நேரம் சரியில்லையா நீங்களே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும். கடன் சுமை குறையும். உங்களை இத்தனை நாள் தொடர்ந்து வந்த பீடை பிணிகள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரத்தை சொன்ன முருகனுக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.