உங்களின் குல சாபம், காரிய தடை தாமதங்கள் நீங்க இதை துதியுங்கள்

sudharsanam-compressed
- Advertisement -

பெரும்பாலான மனிதர்களின் தாங்கள் நல்ல நிலையில் இருக்கிற போது இறைவனை பற்றியோ, ஆன்மீகத்தை பற்றியோ சற்றும் நினைப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் வருகிற போது தான் இதன் மீதான சிந்தனைகள் வருகிறது. பலரும் தங்கள் வாழ்வில் சந்திக்கும் எத்தகைய கஷ்டங்களுக்கும் தங்களின் குலத்திற்கு ஏற்படும் சாபங்கள் மற்றும் துஷ்ட சக்திகள் காரணமாக இருக்கின்றன. அதை நிவர்த்தி செய்யும் சுதர்சன ஸ்லோகம் இதோ.

maha-sudharsana-mantra

சுதர்சன ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே மஹா
சுதர்ஷனாய ஹூம் பட் ஸ்ரீம்

- Advertisement -

ஹ்ரீம் ஓம் சுதர்ஷன சக்ராய
ரிபு சித்தம் பிராமய பிராமய ஸ்வாஹா

திருமாலின் கையில் ஏந்தியிருக்கும் மகா சுதர்சன சக்கரம் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளின் படத்திற்கு முன்பாக நின்று 27 முறை துதிப்பது மிகவும் நல்லது. பெருமாள் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமைகள், மாத ஏகாதசி ஆகிய தினங்களில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் குல சாபங்கள் நீங்கும். தீய எண்ணங்கள், துஷ்ட சக்திகள் உங்களிடம் இருந்து நீங்கும்.உங்களுக்கு அனைத்து விடயங்களிலும் ஏற்படும் தடைகள் தாமதங்கள் ஆகியவற்றை தகர்த்தெறியும் சக்தி சுதர்சன ஸ்லோகத்திற்கு உண்டு.

- Advertisement -

sudarshan_chakra

தீயவற்றை முற்றிலும் நீக்கும் மகா சக்தி கொண்டது சுதர்சன சக்கரம் ஸ்லோகம். இதை முறைப்படி ஒரு வேத மந்திரமறிந்த குருவின் மூலம் உபதேசம் பெற்று உரு ஜெபிப்பதே சிறந்த முறையாகும். சுதர்சன மந்திரத்தை ஜெபிக்க தொடங்கும் முன்பு மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து அவருக்குரிய “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை துதித்து அவரை ஜெபித்த பின்பு இந்த சுதர்சன ஸ்லோகத்தை துதிப்பதால் மிகுந்த நன்மை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்களின் அனைத்து கஷ்டங்களும் தீர துதிக்க வேண்டிய ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sudarshana slokam in Tamil. It is also called as Sudarshana chakra mantram in Tamil or Sudharsana chakra thuthi in Tamil or Sudarshana stotram in Tamil or Sudarshana chakram in Tamil.

- Advertisement -