சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா

sugar-control-food-tamil-1

மனிதர்களை வாட்டக்கூடிய புது வகையான நோய்கள் இன்றைய உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன. ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்று கூறப்பட்ட சக்கரை வியாதி நோய், இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் பீடிக்கிறது. இந்த நீரிழிவு உண்மையில் ஒரு உடல்நல குறைபாடு தானே தவிர ஒரு நோயல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது. அந்த நீரிழிவு குறைபாட்டை கட்டுப்படுத்தும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கு காண்போம்.

blood sugar(sakkarai noi)

நீரழிவு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • ஒரு மனிதனின் கணையத்தில் உற்பத்தியாகும் “இன்சுலின்” ஹார்மோனின் குறைபாட்டால் ஒருவருக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, ஒட்டுமொத்த உடலியக்கத்தை பாதிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • ஒரு நபரின் குடும்ப பரம்பரையில் யாருக்கேனும் இந்த நீரிழிவு குறைபாடு ஏற்பட்டிருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்நோய் அல்லது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • அடிக்கடி உணவு உண்ணாமல் இருப்பது, முறையான உடற்பயிற்சியில்லாமல் இருப்பது போன்றவையும் நீரிழவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது.

சக்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உயர்வு ஏற்படுவது சக்கரை நோய் வருவதற்கான ஒரு வகை அறிகுறியாகும். அதே போல திடீரென அடிக்கடி அதிக அளவு பசி மற்றும் தாகம் ஏற்படுவதும் சக்கரை நோய்க்கான அறிகுறியாகும். இயல்பான நிலையில் இருந்து மாறி, சிறிய வேலை செய்தால் கூட உடல் சோர்வு ஏற்படுவது, அடிக்கடி தலை சுற்றுவது போன்ற உணர்வுகள் கூட சக்கரை நோய்க்கான அறிகுறியாகும். மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் ஒரு மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் தினமும் மாலையில் ஒரு கப் சுண்டல் சாப்பிடுவது நல்லது. அதோடு அடிக்கடி இடையில் பசி எடுத்தால் பாதாம், அக்ரூட் ஆகியவற்றை சாப்பிடலாம்.

vazhai thandu

சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கீரை வகைகள்:

அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலிற்கு தேவையான சத்து கிடைப்பதோடு சக்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.

- Advertisement -

Murugai keerai

சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்:

பொதுவாக சக்கரை நோயாளிகள் எந்த பழ வகையையும் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சக்கரையின் அளவு அதிகரிக்கும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை சாப்பிடலாம். அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ.

Nellikkai

  • நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம்.
  • மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.
  • தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
  • கொய்யா காய் சாப்பிடலாம்.
  • பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம்.

மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே ஒருநாளைக்கு சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது.

சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

கோதுமை

கோதுமை நார் சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு தானியம் ஆகும். இதை கொண்டு செய்யப்படும் உணவுகளை தினமும் இரு வேளை அல்லது ஒரு வேளையாவது நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் உண்ண வேண்டும். ஆனால் பாக்கெட்டில் வரும் கோதுமை மாவை கொண்டு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். ஏன் என்றால் சக்கரை நோயை அதிகரிக்கும் சில பொருட்கள் பாக்கெட் கோதுமை மாவில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் நீங்களே கோதுமையை கடையில் வாங்கி அரைத்து அதில் உணவு சமைத்து சாப்பிடுவது நல்லது.

wheat

மஞ்சள்

நம் நாட்டின் பூர்வீகமான ஒரு மூலிகை மற்றும் உணவுப்பொருள் மஞ்சள். பழங்காலத்திலிருந்தே இந்த மஞ்சளை பல நோய்களை போக்க நமது முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதை தடுப்பதற்கு மஞ்சள் பயன்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.

Turmeric

பூண்டு

பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் பூண்டு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் பூண்டு இடம்பெறுமாறு செய்து கொள்வது நன்மை அளிக்கும்.

Garlic poondu

ஏலக்காய்

மலைகளில் விளைகிற இந்த ஏலக்காயை பச்சையாக மெல்லுவதாலும், உணவில் சேர்த்துக்கொண்டு உண்பதாலும் இதிலுள்ள சக்திகள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சமன்படுத்தி நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.

Elakkai

முட்டை மற்றும் மத்தி மீன்

அசைவ உணவுகளில் கோழி முட்டை மற்றும் கடல் மீனான மத்தி மீனை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதால் அவர்கள் உடலுக்கு சத்தை கொடுத்து, அவர்களிடம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

egg

சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய காய்கறிகள்:

வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை சக்கரை நோயாளிகள் தவிர்பது நல்லது.

Potato

சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய பழ வகைகள்:

சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சக்கரை நோய் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது தவிர அதிக இனிப்புள்ள பழங்களையும் தவறது நல்லது.

Mango

சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சில மூலிகை வகைகள்:

ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அதே போல தினமும் 100மி.லி அளவு அருகம்புல் சாறை அருந்தலாம் அல்லது கொத்தமல்லி சாறு, நெல்லிக்காய் சாறு, கறிவேப்பில்லை சாறு போன்றவற்றில் ஏதோ ஒன்றை தினமும் 100மி.லி அளவு அருந்தலாம்.

இதையும் படிக்கலாமே:
அம்மை நோய் நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

English Overview:
Here we have Tamil maruthuvam tips for Sakakrai noi. Here we have given Sugar control food list in Tamil. Sugar patient can eat those food to control sugar.