- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிர ஜெயந்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

சுக்கிர ஜெயந்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். பணத்தை சம்பாதித்து சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இந்த சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். சுக்கிரனின் அருள் இருந்தால்தான் சுகமான ராஜ யோக வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. பல வழிமுறைகள் இருந்தாலும் சுக்கிரஜெயந்தி அன்று நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறை என்பது அதிக பலனைத் தரும். அன்றைய தினத்தில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர ஜெயந்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

நாளைய தினம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஜெயந்தி வருகிறது. சுக்கிர பகவான் அவதரித்த தினமான இன்றைய தினத்தில் சுக்கிர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் சுக்கிர பகவானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தோம் என்றால் சுகபோகமான ராஜ யோக வாழ்க்கையை வாழ முடியும். பணத்திற்கு எந்தவித பஞ்சமும் வராது ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -

காலையில் எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை செய்யக்கூடிய பூஜைகள் அனைத்தையும் செய்து முடித்து விட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக சுக்கிர பகவானுக்குரிய தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வெள்ளி விளக்கில் ஏற்றுவது என்பது சிறப்பு. இதற்கு காரணம் சுக்கிர பகவானுக்குரிய உலோகம் வெள்ளி என்பதுதான். வெள்ளி விளக்கு இல்லாத பட்சத்தில் வீட்டில் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, கஜலட்சுமி விளக்கு போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை மொச்சை முழுவதுமாக பரப்ப வேண்டும். அதற்கு மேல் நாம் ஏற்ற வேண்டிய விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி வெள்ளை நிற பஞ்சு திரியை போட வேண்டும். இந்த விளக்கை சுக்கிர பகவானுக்குரிய மல்லிகைப் பூவால் அலங்கரிக்க வேண்டும். பிறகு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு இதற்குள் நாணயங்களை போட வேண்டும். அதனால் ஆறு ரூபாய் நாணயம் போட வேண்டும். ஐந்து ரூபாய் உடன் ஒரு ரூபாயை சேர்த்தும் போடலாம். இரண்டு ரூபாயாக மூன்று நாணயங்களையும் போடலாம். ஒரு ரூபாயாக ஆறு நாணயங்களையும் போடலாம். அது நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றது. இப்படி போட்டு முடித்த பிறகு சுக்கிர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறை உச்சரிக்கை இயலாது என்று நினைப்பவர்கள் ஒரு முறையாவது நாளைய தினத்தில் சுக்கிர ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து உச்சரிக்க வேண்டும்.

மேலும் இந்த தீபத்திற்கு முன்பாக வெள்ளை நிறத்தினால் ஆன இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் சுக்கிர ஜெயந்தி அன்று வீட்டில் தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு சுக்கிரனின் யோகம் கிடைக்கப்பெறும் அதனால் சுகபோகமான ராஜ யோகமான வசதி மிகுந்த வாழ்க்கை அமையும். எந்தவித பண கஷ்டமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பணம் சேர பத்து ரூபாய் பரிகாரம்

இந்த தீப வழிபாட்டை நாளைய தினம் செய்பவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்