எதற்கும் உருப்படவே மாட்டான், எந்த காரியத்திலும் கவனம் செலுத்தாத உதவாக்கரையாக இருக்கிறான் என்று பலரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று முனைப்புடன் இருப்பவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டும் என்று நினைப்பவர்களும் முருகப்பெருமானை நினைத்து இந்த எளிமையான வழிபாட்டை செய்தால் போதும். அந்த வழிபாடு என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் விழித்துக் கொண்டு இருப்பார்கள் தன்னை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கதவுகளும் மூடிவிட்டது இப்பொழுது கதவே இல்லை வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற விரக்திக்கு கூட ஆளாகி இருப்பார்கள். இதில் இருந்து வெளியே வருவதற்கும் அதிர்ஷ்ட கதவை திறப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றிதான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
கலியுக தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை நாம் பல வேண்டுதலுக்காக பல விதங்களில் வழிபாடு செய்வோம். அப்படி நாம் செய்யக்கூடிய வழிபாட்டில் மனமகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றித் தரும் வள்ளல் குணம் கொண்டவராக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்று கூறுவார்கள். அந்த சுக்கு நம்மிடம் இருந்தால் நம் உடலில் எந்தவித நோயும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. பல மருத்துவ குணமிகுந்த இந்த சுக்கை வைத்து முருகப்பெருமானை நினைத்து எந்த முறையில் வழிபாடு செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோமா?
இந்த வழிபாட்டை எந்த நாள் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். முருகனுக்கு உகந்த தினங்களிலும் நாம் செய்யலாம். ஏதாவது ஒரு முக்கியமான காரியத்திற்கு செல்கிறோம். அது நம்முடைய வாழ்க்கையை திருப்பி போட்டு விடும் என்று நினைக்கும் பொழுதும் இந்த வழிபாட்டை செய்துவிட்டு சென்றோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் நம் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு வாசனை மிகுந்த மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருடைய படத்திற்கு முன்பாக இரண்டு விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பூச்சி இல்லாத நல்ல சுக்காக பார்த்து ஒரு சுக்கு எடுத்து நம்முடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு முருகப் பெருமானுக்குரிய மந்திரங்களை கூற வேண்டும். “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தையோ அல்லது முருகப்பெருமானின் மூலமந்திரத்தையோ 108 முறை கூற வேண்டும். இப்பொழுது மந்திரத்தின் சக்தி அனைத்தும் சுக்கில் உருவேறி இருக்கும்.
இந்த சுக்கை ஒரு பேப்பரில் மடித்து ஆண்கள் தங்களுடைய சட்டை பையில் வைத்துக் கொள்ளலாம். பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுத்துச் செல்லும் பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இந்த சுக்கை எடுத்துச் செல்லும் அந்த வேலை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறுவதோடு நம்முடைய வாழ்க்கையே மாற்றக்கூடிய ஒரு அற்புதமான பொருளாகவும் திகழும்.
இதையும் படிக்கலாமே: பணம் தரும் வெள்ளெருக்கு கட்டை பரிகாரம்
முருகப் பெருமானை முழு மனதுடன் நம்பி சுக்கை வைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவை தட்டும்.