- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் தரும் வெள்ளெருக்கு கட்டை பரிகாரம்

பணம் தரும் வெள்ளெருக்கு கட்டை பரிகாரம்

- Advertisement -

வெள்ளிருக்கு செடி விநாயகரின் அருள் பெற்ற செடி. வீட்டில் வெள்ளருக்கன் கட்டையில் செய்த விநாயகர் வைத்து வழிபாடு செய்தால், செல்வ செழிப்பு உயரும் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் இன்று ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை பார்க்க போகின்றோம். கடன் சுமை இருக்கிறது, வருமானம் அதிகமாக வரவில்லை, வரக்கூடிய பணம் நியாயமாக செலவானால் பரவாயில்லை.

அநியாயமாக கையை விட்டு செல்கிறது என்பவர்கள் எல்லாம், விநாயகரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் பணம் நிச்சயம் வீட்டில் நிலையாக தங்கும். வீண் விரைய செலவுக்கு போகாது. அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பானது உயர்ந்து கொண்டே செல்லும். அந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை பதிவுகுள் சென்று பார்ப்போமா.

- Advertisement -

பணம் சேர்க்கு வெள்ளருக்கு கட்டை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெள்ளெருக்கன் கட்டை கட்டாயம் தேவை. வீட்டு பக்கத்தில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் இந்த கட்டை கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி வந்த கட்டையை முதலில் மஞ்சள் தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். ஈரம் போக அதை கொஞ்சம் காய வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பச்சை நிற நூல் தேவை.

காட்டன் நூல்கண்டாக வாங்கிக் கொள்ளுங்கள். பூ கட்டக்கூடிய நூல், உல்லன் நூல் எது கிடைத்தாலும் பரவாயில்லை. துணி தைக்கும் லைலான் நூலை மட்டும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு 5 ரூபாய் நாணயத்தை எடுத்து, மஞ்சள் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். விநாயகரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை வெள்ளெருக்கம் கட்டையில் வைத்து, இந்த பச்சை நூலை போட்டு நன்றாக சுற்ற வேண்டும். எவ்வளவு தூரம் சுற்ற முடியுமோ சுற்றி நூலை கட்டிக் கொள்ளுங்கள். மூன்று முழம் நூல் அல்லது நான்கு முழம் நூலை அந்த கட்டையில் சுத்தலாம். தவறு கிடையாது.

தயாரான இந்த கட்டையை பூஜையறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் வைக்க வேண்டும். விநாயகர் பாதத்தில் இந்த கிண்ணத்தை வைத்து சின்னதாக ஒரு பூஜை செய்யுங்கள். உதிரிப் பூக்களை வைத்து இந்த கட்டைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் செல்வ கணபதியே நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யலாம். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து முழு முதல் கடவுளான விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வரக்கூடிய வருமானம் சேமிப்பில் தங்க வேண்டும். பணம் அநியாயமாக கையை விட்டு செல்லக்கூடாது. கடன் சுமை இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த கட்டையை அப்படியே கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால், 48 நாட்களுக்குள் நல்ல மாற்றம் தெரியும். அந்த விநாயகரது அருளாசியால் உங்களது சேமிப்பு உயரும் கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

48 நாட்கள் கழித்து இந்த கட்டை உங்கள் பீரோவுக்குள்ளேயே இருக்கலாம். தவறு கிடையாது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை இந்த கட்டையை மாற்றி வைத்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை செய்து உங்களுக்கு நல்ல பலன் இருக்கும் பட்சத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை என்றால் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர்கோவிலுக்கு சென்று அந்த விநாயகப் பெருமானுக்கு உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய தொடங்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஜூன் 2024 கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த நாட்கள்

மேலும் மேலும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே செல்வீர்கள். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை,  மாதத்தில் முதல் நாளான இன்று கூட செய்யலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்