நாளை 13/5/2022 சித்திரை வெள்ளிக்கிழமையில் பிரதோஷ வழிபாடு இப்படி செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும்!

sivan-nandhi-pradosham
- Advertisement -

நாளை சுபகிருது வருடம் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். இந்த சித்திரை வெள்ளி, பிரதோஷ திதியில் வருவதால் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. பிரதோஷ நாளில் சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டால் தீராத கடன்கள் தீரும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் அனைத்தும் விலகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி, கேட்ட வரம் கேட்ட படி கிடைக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவ பெருமானை எப்படி வழிபடுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சித்திரை வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினம் சுக்கிரவாரம் பிரதோஷம் என்று கூறப்படுகிறது. பொதுவாக சோமவார பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் ரொம்பவே விசேஷமானது. இந்த சித்திரை வெள்ளிக்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தன்று முழு நாளும் விரதமிருந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய கடன்களும் எளிதாக தீரும் என்கிறது சாஸ்திரங்கள்.

- Advertisement -

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரையிலான கால கட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானைப் கண்குளிர தரிசனம் செய்து, அபிஷேக பொருட்களை தானம் செய்வதன் மூலம் நமக்கு தீராத தோஷங்கள் அனைத்தும் தீர்வதாக ஐதீகம் உண்டு.

பால், விபூதி, தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை உங்களால் முடிந்த மட்டும் நீங்கள் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருளைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது கண்குளிர தரிசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவபெருமானை உங்கள் வேண்டுதல் போய் சென்றடைய, நந்தி பகவானையும் வழிபட வேண்டும். நந்தியுடைய காதுகளில் நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், அது சிவபெருமானுக்கு நேரடியாக போய் சேரும் என்கிறது ஆன்மீகம். எனவே கோவிலுக்கு சென்று நந்தி பகவானை தவறாமல் வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

இந்நாளில் நந்தி பகவானுக்கு உரிய பரிகாரம் செய்ய பசுக்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே சிறப்புக்கு உரியதாக கருதப்படுகிறது. பசுவிற்கு பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் வெல்லம் கலந்து, மஞ்சள் வாழைப்பழம் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும். கோவிலில் கொடுக்க முடியா விட்டாலும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பசுக்களுக்கு இந்த தானத்தை நீங்கள் தவறாமல் கொடுத்து பயன்பெறலாம்.

தெரியாமல் கூட வில்வ இலைகளால் பிரதோஷ தினத்தில் அர்ச்சனை செய்தால் செய்த புண்ணியங்கள் யாவும் இரட்டிப்பாகும். எனவே வீட்டில் அல்லது கோவிலில் சிவனுக்கு கட்டாயம் வில்வ அர்ச்சனை செய்யுங்கள். இதற்காக முன்கூட்டியே வில்வ இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிரதோஷ நாளில் சோமசூக்த பிரதட்சண வலம் வருவது ரொம்பவே விசேஷமானது. இந்நாளில் அன்னதானம் செய்பவர்களுக்கு ஈரெழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். யாராவது ஒருவருக்காவது உணவு பொட்டலம் வாங்கிக் கொடுங்கள். மேலும் சிவ ஸ்லோகங்கள் உச்சரிப்பது, சிவ புராணம் படிப்பது போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம். முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டு சிவ சிந்தனையில் ஈடுபடலாம்.

- Advertisement -