சுக்ரன் பெயர்ச்சி – 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரம்

sukran
- Advertisement -

சுகபோகங்களை அள்ளி தரும் கிரகமாக சுக்கிர பகவான் விளங்குகிறார். இந்த சுக்கிர பகவான் வருகின்ற மே மாதம் 2 ஆம் தேதி மதியம் 1.46 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சுக்கிர பெயர்ச்சியின் பொழுது 12 ராசிக்காரர்களும் தங்களின் பொருளாதார நிலை சிறப்படைய செய்து கொள்ள வேண்டிய பரிகாரங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு மூன்றாம் வீடான புதன் பகவானுக்குரிய மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியிலான விரயங்களை தவிர்க்கவும், நல்ல வருமானம் கிடைக்கவும் சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கோ சென்று லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இரண்டாம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால் தங்களின் கவனக்குறைவால் சில பொருள் விரயம் ஏற்படலாம். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காலத்தில் ரிஷப ராசியினர் மிகுதியான லாபங்களையும், மன மகிழ்ச்சியையும் பெற 10 வயதுக்கு குறைவாக இருக்கின்ற, பூப்படையாத பெண் குழந்தைகளுக்கு பொம்மை, இனிப்புகள் போன்ற பரிசுப் பொருட்களை வாங்கி தந்து மகிழ்விப்பதால் சுக்கிரனின் அருளை பெற முடியும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு அந்த ராசியிலேயே சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால் எதிரிகள் வழியில் பொருளாதார ரீதியிலான சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் கன்றுடன் உள்ள வெள்ளை நிற பசுமாட்டிற்கு சர்க்கரை பொங்கல், பால் சேர்க்காத அவல் பாயசம் போன்றவற்றை உண்ண கொடுப்பது நல்லது.

- Advertisement -

கடகம்:
கடக ராசியினருக்கு 12 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால் பெண்கள் வழியில் எதிர்பாராத பொருள் விரயங்கள் உண்டாக்கலாம். இதை தவிர்க்க செவ்வாய்க்கிழமைகளில் அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளுக்கு 2 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடலாம். சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமைகளில் கோசாலைகளில் இருக்கின்ற பசுமாடுகளுக்கு அகத்திகீரை, வெல்லம் கலந்த பச்சரிசி போன்றவற்றை உண்ண கொடுக்கலாம்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு 11ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால், இந்த ராசியினருக்கு வீட்டில் குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காலத்தில், தங்களின் பொருளாதார நிலை வலுப்பெற, சிம்ம ராசியினர் ஒரு வளர்பிறை வெள்ளி தொடங்கி, வாரந்தோறும் சுக்கிர பகவான் சந்நிதி உள்ள கோயிலுக்கு சென்று, சுக்கிர பகவானுக்கு பால், சர்க்கரை அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்கு 10 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால், சிலருக்கு தொழில் ரீதியான செலவுகள் ஏற்படலாம். தங்களின் வருமானம் பெருகவும், சேமிப்பு அதிகரிக்கவும் கன்னி ராசியினர் வெள்ளிக்கிழமைகள் தோறும், சுக்கிர ஹோரை நேரங்களில், சுக்கிர பகவானுக்குரிய காயத்திரி மந்திரங்களை துதித்து வர வேண்டும்.

துலாம்:
துலாம் ராசிக்கு 9 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளதால், சிலருக்கு தந்தை வழியிலான சொத்துக்களின் வரவு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தன லாபம் இருக்கும். துலாம் ராசியினர் தங்களின் பொருளாதார நிலை வலுப்பெற வெள்ளிக்கிழமைகளில் வாழ்க்கை துணையுடன் இணைந்து,ஏழ்மை நிலையிலிருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்வது சிறப்பு.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்கு 8 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால் அளவுக்கு மீறிய சுகபோகத்திற்கான செலவுகளால் பொருள் விரயம் உண்டாகும். விருச்சிக ராசியினர், சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காலத்தில் தங்களின் செல்வநிலை உயரவும், வீண் விரயங்கள் நீங்கவும் வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில் வெள்ளீஸ்வரர் பெயரில் சிவபெருமான் அருள்புரியும் கோயிலுக்கு சென்று, சிவபெருமான் – அம்பாள் இருவருக்கும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்கு 7 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால், தங்களின் வாழ்க்கைத் துணை வழியில் சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தனுசு ராசியினர் தங்களுக்கான பொருள் வரவு அதிகரிக்க வியாழக்கிழமை மாலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாகவும், வெள்ளிக்கிழமை காலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபமேற்றி வர வேண்டும்.

மகரம்:
மகர ராசியினருக்கு 6 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால் உடல்நல ரீதியிலான பிரச்சனைகள் ஏற்பட்டு, மருத்துவ செலவுகள் ஏற்படும். மகர ராசியினர் தங்களின் வருமானம் உயரவும், சேமிப்பு சிறக்கவும், அசுர குருவான சுக்கிர பகவானை, ஆயுட்காரகனாக விளங்கும் சனிபகவானுக்குரிய சனிக்கிழமை தினத்தில் சுக்கிர ஹோரையில் வழிபட வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு 5 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால், தங்களின் பிள்ளைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படக்கூடும். சுக்கிரனின் இத்தகைய பெயர்ச்சி காலத்தில், கும்ப ராசியினர் தங்களின் லாபங்கள் பெருகவும், செல்வம் உயரவும். வெள்ளிக்கிழமைகளில் அங்காள பரமேஸ்வரி எனும் பெயரில் அம்பாள் அருள்புரியும் கோயிலுக்கு சென்று, அம்பாளின் அபிபிஷேகத்திற்கு பசும்பால் தானம் செய்து வழிபட்டு வர நலம் பயக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு 4 ஆம் வீடான மிதுனத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்வதால், சிலருக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். மீன ராசியினர் தங்களின் பொருளாதார நிலை வலுப்பெற, சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் ரவை லட்டு, வெள்ளை கேசரி போன்ற இனிப்பு பதார்த்தங்களை உங்கள் வீட்டு அக்கம்பக்கத்தினருக்கு உண்ண கொடுப்பதால் நல்ல பலன் பெறலாம்.

- Advertisement -