அக்டோபர் 2 சனிக்கிழமையன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! இதனால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யாரெல்லாம்?

sukran-astro
- Advertisement -

ஒவ்வொரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு கிரகங்கள் பெயர்ச்சியாகும் பொழுது பெரும் அதிர்ஷ்டம் உண்டாகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. சுக, போக வாழ்க்கையை கொடுக்கக் கூடிய சுக்கிர பகவான் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான அமைப்பை கொண்டுள்ளது. புதியதாக வீடு, மனை, தோட்டம், துரவு என்று வாங்க நினைப்பவர்களுக்கு அற்புதமான சாதக அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். கணவன், மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றியை ஈட்டுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி மனைவி வழி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். அலங்கார, ஆபரணங்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை இந்நேரத்தில் தவிர்ப்பது நல்லது. இனிப்பு விரும்பிகாளாக இருக்கக் கூடிய உங்களுக்கு இனிப்பான செய்திகள் காத்துக் கொண்டிருக்கிறது.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்ர பெயர்ச்சியால் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புத பலன்கள் உண்டு. சமையல் தொடர்பான பொருட்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். இசை, நடனம் போன்ற கலை துறையில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய ரகசியங்களை மற்றவர்களிடம் இந்நேரத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது.

- Advertisement -

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. உங்கள் ராசிக்கு இடம் பெயர இருக்கும் சுக்கிர பகவான் ஆடம்பரமான வசதி, வாய்ப்புகளை கொடுக்க இருக்கிறார். வருமான ரீதியான பிரச்சனைகள் குறைந்து பணப் புழக்கம் அதிகரித்து காணப்படும். துணி வியாபாரம், நகை வியாபாரம் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் லாபம் உண்டாகும். நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் காண்பீர்கள். வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொன், பொருள் சேரும் யோகம் உண்டு. தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர் பரஸ்பர அன்புடன் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி ஆடம்பர வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொடுக்கும். வீட்டை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். மது, புகை போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு பெருகும்.

- Advertisement -