சுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Sukran peyarchi astrology

நவகிரகங்களில் சுகங்களுக்கு அதிபதியாகப் போற்றப்படுவர் “சுக்கிர பகவான்” ஆவார். ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு எல்லாவகையான இன்பங்களையும் அள்ளித் தருபவராக கருதப்படும் “சுக்கிர பகவான்” ஜூலை மாதம் 5 ஆம் தேதி மதியம் 2.38 மணியளவில் “கடக” ராசியிலிருந்து “சிம்ம ” ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். இந்த சுக்கிரன் கிரக பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக் கூடிய பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்:

Mesham Rasiமேஷ ராசிக்கு ஐந்தாமிடமான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாவதால் இந்த மாதம் உங்களுக்கு தனவரவுகள் நன்றாக இருக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மற்றும் தடைகள் நீங்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரகளில் நல்ல லாபம் ஈட்ட முடியும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு பாதிப்புகள் உண்டாகும்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசியினருக்கு நான்காமிடமான சிம்மத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்துள்ளதால் உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வில் தேற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

உங்களுக்கான காதல் பொருத்தம் அறிய இதோ : Love Calculator

- Advertisement -

மிதுனம்:

midhunamமிதுன ராசியினருக்கு மூன்றாமிடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்திருப்பதால் வீண் அலைச்சல்களால் சற்று உடல் பாதிப்பு ஏற்படலாம். நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய தன வரவுகள் வட்டியுடன் வந்து சேரும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு சுபுச் செலவுகள் ஏற்படும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசியினருக்கு இரண்டாமிடமாகிய சிம்மத்திற்கு சுக்கிர பகவான் பெயர்ச்சியடைவதால் பிறருடன் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பண வரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில்களில் சற்று சுணக்க நிலை காணப்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் போன்ற விவகாரங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

சிம்மம்:

simmamசிம்ம ராசியினருக்கு அந்த ராசியிலேயே சுக்கிரன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தன வரவுகள் நன்றாக இருக்கும். வீட்டிலுள்ள பெண்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உறவினர்களுடன் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:

Kanni Rasiகன்னி ராசியினருக்கு பன்னிரெண்டாம் இடமான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிவோர்களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களில் பணி மாற்றங்கள் கிடைக்கும். ஒரு சிலர் புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைப்ப பெறுவீர்கள். குடும்ப பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசியினருக்கு பதினோராவது ராசியான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் தந்தை வழியில் உடல் நல பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் எழலாம். புதிய தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும்.
உடன் பணிபுரிபவர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

virichigamவிருச்சிக ராசியினருக்கு பத்தாமிடமாகிய சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள். உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தன வரவுகள் உண்டாகும்.

திருமண பொருத்தம் அறிய இங்கு கிளிக் செய்யவும்

தனுசு:

Dhanusu Rasiதனுசு ராசியினருக்கு ஒன்பதாமிடமாகிய சிம்மத்திற்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தியிலும் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்:

Magaram rasiமகர ராசியினருக்கு எட்டாமிடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் மற்றும் மனதில் புதிய பலமும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட நாட்களாக தாமதமாகிக்கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை இல்லாமல் வாடியவர்களுக்கு நற்சந்ததி உண்டாகும். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசியினருக்கு ஏழாமிடமாகிய சிம்மத்திற்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலர் மக்களால் பாராட்டப்படும் காரியங்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

மீனம்:

meenamமீன ராசியினருக்கு ஆறாமிடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். பல காரணங்களுக்காக கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்த முயலக்கூடும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.