சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2019 ஜூன் 29- 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

sukran
- Advertisement -

பூவுலகில் நாம் அனுபவிக்கின்ற அனைத்து வகையான இன்பங்களுக்கும் காரகன் “சுக்கிர பகவான்” ஆவார். இந்த சுக்கிர பகவான் ஜூன் மாதம் 29 ஆம் தேதி நள்ளிரவு 01.47 மணியளவில் ” ரிஷப” ராசியிலிருந்து “மிதுன” ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசிக்கு மூன்றாம் இடமான மிதுனத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் புதிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகே வெற்றி உண்டாகும். குழந்தைகள் கல்வியில் சற்று பின்தங்கும் நிலை ஏற்படும். பணவரவிற்கு குறைவேதும் இருக்காது. பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். பணி நிமித்தமாக சிலர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசிக்கு 2 ஆம் வீடாகிய மிதுனத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். திடீர் தனவரவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும்.அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் மிக சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். சிலர் புதிய வீடு, வாகனம் கிடைக்கப்பெறுவார்கள்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுன ராசியிலேயே சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்கு 12 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் வந்து சேரும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உண்டாகும்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்கு 11 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசிக்கு 10 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பணவரவு உண்டாகும். குடும்பத்திற்கு ஆடம்பர பொருட்களை வாங்கும் அமைப்பு ஏற்படும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்கு 9 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல்நலம் மிக சிறப்பாக இருக்கும். உங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிகம் ராசிக்கு 8 ஆம் இடமாகிய மிதுனத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்கு 7 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் அரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகளில் தாமதங்கள் ஏற்படும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்கு 6 ஆம் இடமான மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசிக்கு 5 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறிது குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர உறவுகளால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். ஒரு சிலருக்கு பூமி லாபங்கள் ஏற்படும். புதிய நபர்களிடம் பணம் சம்பந்தமான விடயங்களில் எச்சரிக்கை அவசியம்.

மீனம்:

meenam

மீனம் ராசிக்கு 4 ஆம் இடமாகிய மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும். சிலருக்கு பெண்களின் உதவிகளால் அதிக தனலாபங்கள் உண்டாகும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்

இதையும் படிக்கலாமே:
என்ன திதியில் என்ன செய்தால் யோகங்களை பெறலாம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sukran peyarchi palangal june month in Tamil. It is also called as sukran peyarchi palangal in Tamil.

- Advertisement -