வேலை, தொழில் பற்றி கூறும் குரு மற்றும் சனி கிரகங்கள்

Sani Astrology
- Advertisement -

ஜோதிடம் என்பது நமது வாழ்வின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்றையும் தெரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டி ஆகும். ஜோதிடத்தில் அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் உங்களின் ஜாதகம் காண்பித்தால் நிச்சயம் பல சரியான ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம். அந்த வகையில் ஒரு மனிதன் செய்ய கூடிய வேலை, தொழில், வியாபாரம் பற்றிய சில அவசிய விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமான குரு பகவானும், சனி பகவானும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிரகங்களாக கருதப்படுகிறார்கள். எந்த ஒரு மனிதனின் ஜாதகத்திலும் அவனது வாழ்க்கைக்கு தேவையான பொருளை ஈட்டுவதற்கான செல்வம் ஈட்ட செய்கிற வேலை, தொழில் வியாபாரம் போன்றவற்றை தீர்மானிப்பதில் இந்த இரு கிரகங்களோடு சேர்த்து லக்னாதிபதி எனப்படும் லக்னத்திற்குரிய கிரகம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

- Advertisement -

உங்களின் ஜாதகத்தில் உங்களின் லக்னத்திற்குரிய அதிபதி லக்னத்திற்கு 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே செய்கிற வேலை, தொழில், வியாபாரம் போன்றவை உங்களுக்கு அவ்வளவு பொருளாதார மேன்மைகளையோ, லாபங்களையோ தராது. உதாரணமாக உங்களின் லக்னம் கும்பம் என்று வைத்துக்கொள்வோம். கும்பத்திற்கு அதிபதி சனி பகவான். இந்த சனி பகவான் உங்கள் லக்னத்திற்கு 6 ஆம் இடமாகிய கடகத்திலோ, 8 ஆம் இடமான கன்னியிலோ, 12 ஆம் இடமான மகரத்திலோ இருக்க கூடாது. ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 10 ஆவதாக இருக்கும் வீடு அந்நபரின் ஜீவன ஸ்தானம் எனப்படும் வேலை, தொழில் பற்றி கூறுவதாகும்.

Govt job

இந்த 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பவர்கள் ஓரிடத்திலேயே அமர்ந்து கொண்டு செய்யும் வகையான வேலை, தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை செய்வது மிகுந்த லாபங்களை கொடுக்கும். இதே 10 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டோ, பயணம் செய்த வாரோ இருக்கும் வேலை, வியாபாரங்கள் போன்றவற்றை செய்வதால் பொருளாதார மேன்மையை பெறலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கான பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Velai vaippu jothidam in Tamil. It is also called Velai jathagam in Tamil or Sani bhagavan in Tamil or Jathagathil guru in Tamil or Jodhidam velai in Tamil.

- Advertisement -