இந்த வெயில் காலத்தில் தலையில் வியத்து வடிந்து, ஈரமாகிக் கொண்டே இருந்தால், அதன் மேலே தூசி தும்புகள் வந்து ஒட்டிக்கொண்டே இருந்தால், ஒரு பிரச்சனை இல்லைங்க பல்லாயிரம் பிரச்சனை நம்முடைய முடிவுக்கு வரும். இதை சரி செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தூசி தும்பு பிரச்சினையால் அரிப்பு ஏற்பட்டு, பொடுகு ஏற்பட்டு, ஒரு சில நாட்களில் நம் தலையில் இருக்கும் முடி எல்லாம் உதிர்ந்து விடும். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க இந்த சம்மரில் என்னதான் செய்வது. சம்மரிலும் உங்கள் முடி அழகாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வளருவதற்கு ஒரு எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த எண்ணெயை சம்மரில் உங்கள் தலையில் தேய்த்து வந்தாலே அரிப்பு பொடுகு அழுக்கு பிரச்சனையால் உங்கள் தலைமுடி அதிக அளவில் உதிராது. அதேசமயம் சம்மரில் நல்ல முடி வளர்ச்சியை பெறலாம். வாங்க அந்த முடி வளர்ச்சியை தரப்போகும் அழகு குறிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெயில் காலத்தில் முடி உதிர்வை தடுக்க எண்ணெய் தயார் செய்யும் முறை:
இதற்கு நெல்லிக்காய் 5, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, செம்பருத்திப்பூ 5, சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 250ml, இந்த பொருட்கள் எல்லாம் தேவை. உங்களுக்கு செம்பருத்தி பூ கிடைக்கவில்லை என்றால் செம்பருத்தி பூ பௌடர் 1 ஸ்பூன் பயன்படுத்தலாம். நெல்லிக்காய்களை எடுத்து கொட்டைகளை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் அல்லது சின்ன நெல்லிக்காய் இரண்டையும் குறிப்புக்கு பயன்படுத்தலாம்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நெல்லிக்காய், வெந்தயம், கருவேப்பிலை, செம்பருத்திப்பூ, போட்டு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயையும் அதில் ஊற்றி, ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். இதை அப்படியே இரும்பு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்து, சிம்மில் வைத்து இந்த எண்ணெயை ஐந்து நிமிடம் போல காய்ச்ச வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் நுரை பொங்கி காயும்.
பிறகு நுரையெல்லாம் அடங்கிய பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து ஒரு காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து எண்ணெய் மட்டும் தனியாக எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு வைத்தாலும் உங்கள் சௌகரியம். அல்லது நான் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்க மாட்டேன் என்றால், வாரத்தில் இரண்டு நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, நன்றாக தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து பின்பு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.
இப்படி செய்தால் தலைமுடியில் வெயில் காலத்தில் முடி உதிர்வு குறையும். அது மட்டும் இல்லாமல் வெயில் காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கவும் செய்யும். ஆனால், வெயில் காலத்தில் கட்டாயமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்க வேண்டும். நீங்கள் வெளியில் சென்று வருபவர்களாக இருந்தால் கட்டாயமாக இதை பின்பற்றி வாருங்கள். தலையில் அழுக்கு அதிகமாக சேர்ந்தால் தலைமுடி உதிர்வு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தால் போதும்.
இதையும் படிக்கலாமே: வேரிலிருந்து ஒரு நரை முடி கூட இனி முளைக்காது. வாரத்தில் இரண்டு நாள் இந்த தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்தால்.
அதிகமாக தலையில் வியர்த்து விட்டால் ஒரு காட்டன் துணியை வைத்து மெதுவாக அந்த வியர்வையை துடைத்து எடுத்து விட்டு ஃபேன் காற்றில் காய வைக்க வேண்டும். வியர்வை தண்ணீர் அதிக நேரம் தலையில் ஊற வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமைந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.