இந்த வெயில் காலத்தில் உங்களுடைய முடியை கடகடன்னு வளர்த்து விட இந்த 1 ஹேர் பேக் போதும். 3 மாதத்தில் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு முடி வளர்ச்சி இருக்கும் பாத்துக்கோங்க.

hair20
- Advertisement -

இந்த வெயில் காலத்தில் வியர்வை தூசு இவைகளிலிருந்து நம்முடைய முடியை பாதுகாத்து கடகடவென வளரச் செய்ய இந்த 1 பேக் போதும். அதே சமயம் வெயிலின் தாக்கத்தால் நம்முடைய முடிக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் இருக்க இந்த பேக் பயனுள்ளதாக இருக்கும். நிறைய பேருக்கு முடி வெடிப்பின் காரணமாக முடி வளராமல் இருக்கும். ஸ்பிலிட்டன்ஸ் என்று சொல்வார்கள் அல்லவா அந்த வெடிப்பை சரி செய்யவும் இந்த ஹேர் பேக் நல்ல ரிசல்டை கொடுக்கும். எல்லாவகையான பிரச்சனைகளையும் சரி செய்து உங்களுடைய முடியை மூன்றே மாதத்தில் வளர செய்யக்கூடிய பவர்ஃபுல்லான ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது. வாங்க பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன், கருஞ்சீரகம் – 4 டேபிள் ஸ்பூன், ஆலிவ் விதை – 4 டேபிள்ஸ்பூன், இந்த 3 பொருட்களை எல்லாம் போட்டு 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். 5 லிருந்து 7 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் வரை கூட தண்ணீரை கொதிக்க வைக்கலாம். ஆனால் அதற்கேற்றபடி தண்ணீரை மட்டும் இதில் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

நாம் சேர்த்து இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களும் நன்றாக தண்ணீரில் வெந்து கொழகொழப்பாக தண்ணீர் மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பேக் சூடாக இருக்கும்போதே ஒரு ஸ்டீல் வடிகட்டியில் வடிகட்டி கொழகொழப்பாக இருக்கும் பேக்கை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை தான் நான் தலையில் அப்ளை செய்ய போகின்றோம்.

இந்த பேக்கோடு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். ஜெல்லி போல உங்களுக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும் அல்லவா. இதை உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் முதல் முடியின் நுனி வரை நன்றாக அப்ளை செய்துவிட்டு, 15 லிருந்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு முடியை அலசி கொள்ளலாம்.

- Advertisement -

ஒருமுறை இந்த பேக்கை அப்ளை செய்யும் போது உங்களுடைய முடி உதிர்வதில் நன்றாக வித்தியாசம் தெரியும்‌. அது மட்டுமில்லாமல் இந்த பேக்கை போட்டு தலையை அலசி விட்டு நன்றாக காயவைத்து சிக்கு எடுத்துப்பாருங்கள். வித்தியாசத்தை நிச்சயம் உணர்வீர்கள். மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போட்டாலே போதும் 3 மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதற்கு இடையிடையே வேறு ஹேர் பேக்கையும் ட்ரை பண்ணலாம் தவறு கிடையாது. உடலுக்கு ஊட்டச்சத்து தரும் தேங்காய்ப்பால், நெல்லிக்காய் ஜூஸ், கறிவேப்பிலை சாறு, ஏபிசி ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும். தினமும் ஐந்து பாதாம் கொட்டைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலை தோலுரித்த அந்த பாதாம் பருப்புகளை சாப்பிட்டு விடுங்கள். ஹேர் பேக்குக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்தை பார்க்கும் போது, முடி வளர்ச்சி இன்னும் இரட்டிப்பாக அதிகரிக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -