வெயிலில் கருப்பான உங்களுடைய முகத்தை வெறும் 10 நிமிஷத்தில் வெள்ளையாக மாற்றும் ஃபேஸ் பேக்! வெயிலில் வெளியே சென்று வர  இனி எந்த பயமும் இல்லை.

face10
- Advertisement -

உங்களுடைய முகம் வெறும் 10 நிமிடத்தில் பிரைட்டாக அழகாக மாறுவதற்கு சுலபமாக ஒரு டிப்ஸை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஃபேஸ் பேக்கை செய்ய சிரமப்பட தேவையில்லை. அதிகப்படியான விலை கொடுத்து எந்த பொருளும் வாங்க வேண்டாம். மிக மிக சுலபமான முறையில் மிக மிக எளிமையான முறையில் முகத்தில் இருக்கும் களைப்பைப் போக்கி, வெயிலினால் உண்டான கருமை நிறத்தை நீக்கி, முகத்தை பேசியல் செய்வதது போலவே அழகாக மாற்ற என்ன செய்யலாம்? இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன.

fair-and-lovely

ஃபேரன் லவ்லி, எலுமிச்சை பழச்சாறு, தக்காளி பழச்சாறு, சர்க்கரை இவ்வளவுதான். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு ஃபேரன் லவ்லி எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதில் வெரும் 2 சொட்டு எலுமிச்சை பழச்சாறு, 1/2 ஸ்பூன் தக்காளி பழச்சாறு, சர்க்கரை 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்து விடும். அப்படி இல்லை என்றால் சர்க்கரையைப் பொடி செய்து போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை மிகவும் தண்ணியாக தயார் செய்து விடாதீர்கள். முகத்தில் தடவ பேஸ்ட் பக்குவத்தில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து விட்டு வெறும் 10 நிமிடம் கழித்து கழுவிப் பாருங்கள். உங்களுடைய முகம் சட்டென வெள்ளையாக மாறி இருக்கும்.

lemon1

திடீரென்று இன்று இரவு ஏதாவது பார்ட்டிக்கு செல்ல வேண்டும். மறுநாள் காலை விசேஷங்களுக்கு செல்லவேண்டும் பியூட்டி பார்லர் செல்வதற்கு நேரம் இல்லை என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். நிறைய நேரம் வெயிலில் இருந்துவிட்டு முகம் கருமையாக மாறி இருந்தால் அந்த கருநிறம் உடனே மாறும்.

- Advertisement -

உங்களுடைய கை பகுதி, கழுத்துப் பகுதி முதுகில் கழுத்து பக்கம் வெயில் படும் இடம் இருக்கும் அல்லவா? அந்த இடம் இப்படியாக வெயில் பட்டு கருமையான இடங்களில் இதை ஒருமுறை போட்டாலும் உடனடியாக சன் டேன் நீங்கிவிடும். வெயில் காலத்திற்கு இந்த குறிப்பு உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும். ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்தீங்கன்னா நிச்சயமா விடவே மாட்டீங்க.

face11

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப்பை மட்டும் சுத்தமாக நீக்கிவிடுங்கள். முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி விட்டு துடைத்து விட்டு அதன் பின்பு இந்த ஃபேரன் லவ்லி ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து பாருங்கள். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எல்லா வகையான சருமத்திற்கும் இது ஏதுவாக அமையும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -