இன்றைய காலக்கட்டத்தில் முகத்தின் நிறத்தை தக்க வைத்து கொள்ள பெரிதும் பாடு பட தான் வேண்டியுள்ளது . இப்போது உள்ள சூழ் நிலை அப்படி வேலை வீடு என்று இரண்டையும் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை. இந்த அழகு குறிப்பு கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த ஒரு முக க்ரீம் இருந்தால் போதும் உங்களுக்கு வேறு அழகு சாதன பொருட்களே தேவைப்படாது. வெயிலினால் ஏற்படும் சன் டேன் ஆனா சருமத்திற்கும், ஆங்காங்கே முகத்தில் ஏற்படும் கருத்திட்டு, முக சோர்வு, அனைத்தையும் இந்த ஒரு பேஸ் பேக் பயன்படுத்தி சரி செய்து விடலாம். அது எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்த பேஸ் பேக் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று வாரத்திற்கு ஒரு முறை சாதாரணமாக பேக் போல பயன்படுத்தி வந்தாலல் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து முகப்பொலிவு ஏற்பட்டு எப்போதும் முகம் பாலிசி என்று இருக்க உதவும்.
மற்றோன்று நீங்கள் வெயிலில் வெளியே சென்று வந்தால் சென்று வந்தவுடன் இந்த பேஸ் பேக் பேக் போட்டு கொண்டீர்களானால் வெயிலினால் ஏற்பட்ட சன் டேன் கருமையும் கூட உடனே மறைந்து விடும். அதனால் உங்கள் முகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முகம் எப்போதும் அழகுடன் இருக்கும். சரி எப்போது இந்த கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
அதற்கு முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர் இரண்டையும் நன்றாக ஆரஞ்சு சாறுடன் நன்றாக கலந்து பேஸ்ட் ஆக மாற்றி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி முதல் பாதி எலுமிச்சை பழத்தை இந்த பேஸ்ட்டில் தொட்டு எலுமிச்சை பழத்துடன் இந்த பேஸ் பேக் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
பத்து நிமிடம் உங்கள் முகத்தில் இது நன்றாக காய்ந்த பிறகு மீண்டும் அடுத்த பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து அதையும் இதே போல் செய்து மறு படியும் ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை எப்போதும் போல் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள் போதும்.
இதையும் படிக்கலாமே: சரும துளைகள் சுத்தமாகி இறுக்கமடைந்து 10 வயது குறைந்தது போல இளமையான தோற்றம் பெற சமையல் கட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே!
இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து கொண்டாலே போதும் அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வெயில் சென்று வந்தால் வந்தவுடன் இதை செய்து விடுங்கள் உங்கள் முகம் எப்போதுமே பாதிப்படையாமல் நல்ல அழகுடன் இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் பயன்படுத்திப் பாருங்கள்.