சரும துளைகள் சுத்தமாகி இறுக்கமடைந்து 10 வயது குறைந்தது போல இளமையான தோற்றம் பெற சமையல் கட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே!

open-pores-men-skin
- Advertisement -

ஒருவருடைய முகம் எத்தனை வயதானாலும், இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் அவர்களுடைய சரும துளைகள் இறுகி சருமம் மிருதுவாக இருப்பதே காரணமாகிறது. இந்த சரும துளைகள் வழியே தூசுகள், மாசுக்கள் அனைத்தும் சென்று நம்முடைய சருமத்தில் பக்க விளைவுகளை ஏற்படுகிறது. இதனால் தான் நம்முடைய சருமம் மேடும், பள்ளமுமாக முகப்பருகளுடன் காணப்படுகிறது.

இந்த எல்லா பிரச்சினையையும் நீக்குவதற்கு சரும துளைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், சரும துளைகள் ஒவ்வொன்றும் இறுக்கம் அடைந்து மிருதுவாகி இளமையான தோற்றம் பெற வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டிய எளிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அழகு குறிப்பாக நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

நம் வீட்டில் சமையல் கட்டில் இருக்கும் பொருட்கள் பெரும்பாலும் ஏராளமான சத்துக்களை கொண்டிருக்கும் ஆனால் அதையெல்லாம் விடுத்து செயற்கையை நாடி நாம் அலைந்து கொண்டிருப்போம். இது மிகுந்த வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்யும் அந்த நேரத்தில் 10 நிமிடம் ஒதுக்கி சமையல் கட்டுக்குள் நுழைந்து இந்த பொருட்களை எடுத்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள் போதும், 10 ஆண்டுகள் குறைந்தது போல ஒரு மிகப்பெரிய மாற்றம் உங்களுடைய சருமத்தில் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலில் நம்முடைய வீட்டில் இருக்கும் முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு முட்டையை எடுத்து வெள்ளை கருவையும், மஞ்சள் கருவையும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கரு நமக்கு தேவையில்லை! முட்டையின் வெள்ளை கரு நம்முடைய சரும துளைகளுக்குள் சென்று மாசுக்களையும், தூசுக்களையும் அடியோடு வெளியில் கொண்டு வரும். மேலும் சரும துளைகளை இறுக செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. அதே போல எலுமிச்சை சாறுக்கு கூட இந்த தன்மை உண்டு. இது கிருமிகளை வெளியேற்றி, இறந்த செல்களை நீக்கி, நம்முடைய முகத்தை எப்பொழுதும் புத்துணர்வாக வைத்திருக்க உதவக் கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இந்த ஒரு பொருளை கண்டிப்பாக முகப்பூச்சுக்கு பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக நம்முடைய சருமத்தை பராமரித்து வரலாம்.

- Advertisement -

இந்த வரிசையில் மூன்றாவதாக தேன் எடுத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் தேன் நம் வீட்டில் இருப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல! அழகிற்கும் நிறையவே பயன்படும் எனவே சுத்தமான தேன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேன் ஒரு ஸ்பூனுடன், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு முட்டையின் வெள்ளை கரு முழுவதையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அழகுக்கும் அழகு சேர்க்கும் அழகிய குளியல் பொடி இது. இந்த குளியல் பொடியை பயன்படுத்தி குளித்து வந்தால், ஆயிசுக்கும் செயற்கையான அழகை தேடி நாம் போகவே வேண்டாம்.

முகம் மட்டுமல்லாமல் கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் தடவிக் கொண்டால் அங்கு இருக்கும் கருமையும் எளிதாக நீங்கும். தடவிய பிறகு 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற விடுங்கள். அதன் பிறகு நன்கு காய்ந்திருக்கும், பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பி பாருங்கள். முகம் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் சரும துளைகள் இறுகி 10 வயது குறைந்தது போல ஒரு அற்புதமான மேஜிக் நிகழும்.

- Advertisement -