சொந்த உழைப்பின் மூலம் செல்வந்தனாக்கும் சுனபா யோகம் பலன்கள்

Chandra Baghavan

ஒரு மனிதனின் வாழ்நாளில் விண்ணில் இருக்கும் ஒன்பது கோள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இருக்கும் போதும் அம்மனிதனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் அக்கிரங்கங்கள் சிறந்த நிலையில் இருக்கும் போது அதிகம் நற்பலன்கள் தருவதை யோகம் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த யோகங்கள் பல உள்ளன. அதில் “சுனபா யோகம்” குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் “சந்திரன்” இருக்கும் வீட்டிற்கு, இரண்டாம் வீட்டில் “சூரியன், சனி, ராகு, கேது” போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று தனியாக இருந்தாலோ அல்லது அனைத்து கிரங்கங்களும் ஒன்றாக சேர்ந்து சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அந்த நபருக்கு “சுனபா யோகம்” ஏற்படுத்துகிறது. சந்திரன் நின்ற வீடு சந்திரனின் சொந்த வீடாக இருக்கும் போதும், சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் “குரு, சுக்கிரன்” போன்ற சுபகிரகங்களில் ஏதேனும் ஒன்று தனியாகவோ அல்லது இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தாலும் அதிக நன்மைகள் உண்டாகும்.

இந்த சுனபா யோகத்தில் பிறந்த நபர்கள் பிறரை வசீகரிக்கும் முகம் மற்றும் உடல் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.அமைதியான சுபாவம் நிறைந்தவர்கள். நேர்மறையான குணங்கள் நிறைந்தவவார்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றலும் எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ள கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சுனபா யோகத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும், தங்களின் கடினமான உழைப்பால் மிகுந்த செல்வத்தை ஈட்டுவார்கள். வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைப்பார்கள்.

Arthanareswarar dance

கலைகளில் ஆர்வமும் ஈடுபடும் அதிகம் இருக்கும். ஒரு சில கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். ஒரு சிலர் திரைப்பட நடிகர்களாகவும் இருப்பார்கள். அழகான மற்றும் அன்பான வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். அரசாங்கத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில் குறைந்த காலத்திலேயே தங்கள் பணிதிறமையால் பிறரை நிர்வகிக்க கூடிய அதிகாரம் மிகுந்த பதவிகளை பெறுவார்கள். சமுதாயத்தில் பிறரமதிக்கும் கவுரவ பதவிகளும் இவர்களை தேடி வரும். இளமையில் சிறிது கஷ்டப்பட்டாலும் பிற்கால வாழ்க்கை இன்பமானதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்திலும் வெற்றியை தரும் ஜெய யோகம் பற்றி தெரியுமா?

ஜாதகம் பார்ப்பது எப்படி என்பதை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sunapha yogam in Tamil.