பச்சை சுண்டைக்காய் குழம்புபை இப்படி மட்டும் வைச்சு பாருங்க, சுண்டைக்காயே பிடிக்காது என்பவர்கள் கூட சட்டி சோறை சைலன்டாக உள்ளே தள்ளுவார்கள்

- Advertisement -

சுண்டக்காவை பொருத்த வரையில் அவ்வளவாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சுண்டைக்காய் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு எலுமிச்சை பழ அளவில் புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு கப் அளவு சுண்டக்காவை எடுத்து அதன் மேல் காம்பு நீக்கி சுத்தம் செய்து, உரல் அல்லது மத்து வைத்து சுண்டக்காவை ஒன்றும் பாதியுமாக நசுக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் மோர், கால் டீஸ்பூன் உப்பு இரண்டையும் சேர்த்த பிறகு, அதில் நசுக்கிய சுண்டக்காய் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் இப்படி வைக்கும் போது சுண்டக்காய் கருகாமல் இருக்கும். அதன் பிறகு 10 சின்ன வெங்காயம், 20 பல் பூண்டு இரண்டையும் இதே போல் லேசாக நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சுண்டைக்காய் குழம்பை தாளித்துக் கொள்ளலாம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். மண் சட்டி இருந்தால் அதில் வைத்தால் குழம்பு இன்னும் ருசியாக இருக்கும். பாத்திரம் சூடானவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்தவுடன், நசுக்கி வைத்த வெங்காயம், பூண்டு இரண்டையும் எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு மோரில் போட்டு வைத்த சுண்டக்காவை எடுத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து அதையும் வெங்காயம், பூண்டுடன் சேர்த்து வதக்க வேண்டும். சுண்டக்காவை எந்த அளவிற்கு வதக்குகிறோமோ அந்த அளவு அதில் கசப்புத் தன்மை நீங்கி நல்ல ருசியாக இருக்கும்.

சுண்டக்காய் நன்றாக வதங்கிய பிறகு அத்துடன் இரண்டு தக்காளி பழத்தையும் நறுக்கி சேர்த்து அதையும் வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் வதங்கிய பிறகு ஊற வைத்து புளியை நன்றாக கரைத்து திப்பி இல்லாமல் வடி கட்டி அந்த புளிக்கரைசலையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அடுப்பை ஹை பிளேமில் வைத்து குழம்பை 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடுங்கள்.

குழம்பு நன்றாக கொதித்து சுண்டி எண்ணெய் பிரிந்து மேலே வந்தவுடன், சின்ன நெல்லிக்காய் அளவிற்கு வெல்லம் சேர்த்து குழம்பை ஒரு முறை நன்றாக கலந்து விட்டு இறக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் பாரம்பரிய முறையில் பச்சை சுண்டைக்காய் குழம்பு அருமையாக தயாராகி விட்டது.

இந்த முறையில் குழம்பு வைத்து சுட சுட சாதத்துடன் இந்த சுண்டைக்காய் குழம்பு ஊற்றி சாப்பிட்டால், அமிர்தம் போல் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒரு முறை இப்படி சுண்டைக்காய் குழம்பு செய்து பாருங்க.

- Advertisement -