இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் தொடரை இழந்தோம் – ஆஸி கேப்டன்

paine

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இவ்வ்ரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரினை சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

koli

இந்த டெஸ்ட் தொடர் வெற்றியினை இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கு நல்ல உத்வேகத்தை தரும். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குழுவிற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் தனது வருத்தத்தினை அவர் தெரிவித்தார்.

டிம் பெயின் : இந்தியாவிற்கு எதிரான இந்த தோல்வி எனக்கு சற்று வேதனையை தந்தது. மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவது எங்களது அணியின் பேட்ஸ்மேன்களை நிலையாக ஆட இடமளிக்கவில்லை. எங்களது அணியின் பேட்டிங்கும் சரியாக அமையவில்லை இதுவே தொடரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் இந்த தோல்வி மூலம் எங்களது குறைகளை திருத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

finch 1

இதனை நாங்கள் சரிசெய்து இந்திய அணிக்கெதிராக துவங்க உள்ள ஒருநாள் தொடரை கைப்பற்றி அவர்களை பழி தீர்ப்போம். அதற்காக கடும் பயிற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ள உள்ளோம். ஒருநாள் தொடருக்கான ஆடும் 11பேர் கொண்ட அணி சில தினங்களில் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான ஆரோன் பின்ச் அறிவிப்பார் என்று பேட்டியினை முடித்துக்கொண்டார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வெற்றி 1983 உலகோப்பையை விட பெரிய வெற்றி – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்