காலம் மாற மாற, மனிதர்களுடைய நம்பிக்கையிலும் மாறுபாடு வந்துவிட்டது. அந்த காலத்தில் எல்லாம் இந்த ஏவல் பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை போன்ற எதிர்மறை ஆற்றல்கள் மீது இருந்த நம்பிக்கையை விட, இந்த காலத்தில் வாழும் மனிதர்களுக்கு இது போன்ற எதிர்மறை ஆற்றலின் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது.
எதிர்பாராது ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால், நம்முடைய சிந்தனை எங்கெங்கோ செல்கிறது. யாராவது நமக்கு கெட்ட சக்திகளை ஏவி விட்டு இருப்பார்களோ, இதனால் தான் நமக்கு வாழ்க்கையில் துன்பம் வருகிறதோ, என்று தேவையற்ற சிந்தனையில் மூழ்கி விடுகின்றோம். அந்த பயமே ஒரு சில சமயத்தில் நிஜமாகவும் மாறிவிடுகிறது.
நாம் நினைப்பது போல நமக்கான பிரச்சினைகளும் வர துவங்குகிறது. இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அல்லது நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று உறுதியாக தெரிந்தால், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் அந்த செய்வினை பாதிப்பில் இருந்து வெளிவர இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
செய்வினை விலக விளக்கு பரிகாரம்
தொடர்ந்து 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எல்லோரும் வீட்டில் இருக்கும் சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. முதலில் மண் அகல் விளக்குகள் தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். உங்கள் வீடு எவ்வளவு பெருசாக இருக்கிறதோ, அதற்கு தகுந்தது போல மண் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு பெட்ரூம், ஹால், கிட்சன் இருந்தால், 9 மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய வீடாக இருந்தால் 11, 21 இது போல கணக்குகளில் விளக்குகளை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம். இந்த விளக்குகளில் கட்டாயம் பசு நெய் ஊற்ற வேண்டும். திரி போட்டு வீட்டில் ஆங்காங்கே இந்த விளக்கை, எந்த இடத்தில் எல்லாம் வைக்க முடியுமோ வைத்து விடுங்கள். கார்த்திகை தீபத்திற்கு நாம் எப்படி விளக்கு ஏற்றுவோம்.
அதேபோல தான் நல்லெண்ணெய் ஊற்றாமல், நெய் ஊற்றி இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, ஜன்னல் கதவுகளை மூடி விட வேண்டும். வீட்டிற்குள், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இருக்க வேண்டும். கொஞ்சம் குழுக்கமாக இருக்கும். இந்த விளக்கின் சூடு நம்முடைய உடம்பில் பட வேண்டும். நம் உடல் வியர்த்து வியர்வை வெளியேற வேண்டும்.
ஒரு 30 நிமிடங்கள் அந்த இருட்டில் அந்த தீபச்சுடர் சூட்டில் அமர்ந்திருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, நம் உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றலும், நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீக பரிகாரங்களில் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. பிரபல ஜோதிடரால் சொல்லப்பட்ட பரிகாரம் இது.
இதையும் படிக்கலாமே: சுபகாரிய தடை நீக்கும் குண்டு மஞ்சள்
நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த விளக்கை ஏற்றத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்கள் பிரச்சனை நீங்கும். 27 நாட்களுக்குள் நல்லதொரு முன்னேற்றத்தை காண்பீர்கள். இதுபோல ஆன்மீகம் சொல்லும் சில எளிய பரிகாரங்களை நாம் பின்பற்றும் போது அந்த இறை அருளால், குலதெய்வத்தின் அருளால் நிச்சயம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.