சூப்பர் ஃபாஸ்டா முடி வளர்க்க உங்களுக்கு ஆசையா? குறைந்த நாளில், நிறைய முடி வளர்ச்சியை தூண்டும் ஹேர் பேக் சீக்ரெட் உங்களுக்காக.

hair10
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு பொறுமை இருக்காது. எந்த வேலையைத் தொட்டாலும் அதில் அவசரம். முடியை வளர்க்க வேண்டும் என்றால் கொஞ்சம் பொறுமை தேவை. இல்லைங்க எனக்கு மூன்றே மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரிய வேண்டும். எதிலும் எனக்கு பொறுமை கிடையாது என்பவர்கள் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. இதை ஹேர் பேக் என்று சொல்லலாம். அப்படி இல்லை என்றால் ஹேர் கண்டிஷனர் என்று கூட சொல்லலாம். சரி முதலில் இந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு அரிசி களைந்த தண்ணீர் தேவை. முதலில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, அதன் பின்பு அரிசியில் நல்ல தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் போல ஊறவைத்துக் கொள்ளுங்கள். அரிசி தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும் இல்லையா. அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீர்தான் நமக்கு தேவை.

- Advertisement -

அடுத்து 1/2 அடி நீளத்திற்கு உள்ள அலோ வேரா ஜெல்லை வெட்டி சிறிய சிறிய துண்டுகளாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது கற்றாழைக்கு நடுவில் ஜெல் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் குறுக்கே வெட்டி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த செல்லில் உள்ள சத்து நமக்கு தண்ணீரில் இறங்கும்.

1 பெரிய டம்ளர் அளவு அரிசி களைந்த தண்ணீரை, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் வெட்டி வைத்திருக்கும் அலோ வேரா ஜெல் துண்டுகளை போட்டு, அப்படியே மிதமான தீயில் 5 இலிருந்து 7 நிமிடம் கொதிக்க வையுங்கள். ஜெல் அனைத்தும் தண்ணீரில் நன்றாக இறங்கி இருக்கும். தண்ணீர் கொழகொழவென பக்குவத்திற்கு வந்ததும், இதில் 1 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்த்து கலந்து விட்டால், இரண்டு நிமிடத்தில் கெட்டியாக தொடங்கிவிடும். அரிசி மாவு போட்டவுடன் கைவிடாமல் கலக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுப்பை அணைத்துவிட்டு இதை அப்படியே சுட சுட இருக்கும் போது ஒரு ஸ்டீல் வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வெள்ளையாக இருக்கும் ஹேர் பேக்கில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவு தான். வெள்ளை நிறத்தில் சூப்பரான ஹேர் பேக், ஹேர் கண்டிஷனர் தயார்.

இந்த ஹேர் பேக்கை எப்படி தலையில் போடுவது. இந்த ஹேர் பேக் போடும் போது தலையில் எண்ணெய் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எண்ணெய் இல்லாத முடியில் கூட இந்த ஹேர் பேக்கை ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்துவிட்டு அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து கீழ் பக்கம் வரை நன்றாக அப்ளை செய்து விட்டு, 1/2 மணி நேரம் அப்படியே ஊறவிடலாம்.

தலைவலி ஜலதோஷம் பிடிக்கும் என்பவர்கள் 20 நிமிடம் மட்டும் இந்த ஹேர் பேக்கை தலையில் வைத்துக்கொண்டு, லேசாக ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடவேண்டும். தலைக்கு குளித்துவிட்டு சிக்கு எடுக்கும் போது உங்களுக்கு வித்தியாசம் தெரியும். முடி உதிர்வு குறைந்தது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய முடி அவ்வளவு மிருதுவாக பார்ப்பதற்கு சில்கியாக அழகாக இருக்கும்.

சில பேருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் இந்த ஹேர் பேக்கை தினமும் தலையில் போட்டாலும் தவறு கிடையாது. தயார் செய்த ஹேர் பேக்கை ஒரு ஏர் டைட் கண்டைநேர் போட்டு ஃப்ரிட்ஜில் செய்து வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை நீங்கள் பயன்படுத்தி வரலாம். 3 மாதத்தில் உங்களுடைய முடி வளர்ச்சியில் நிச்சயம் நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை பார்க்க முடியும். (ஆனால் பிரிட்ஜில் வைத்த ஹேர் பேக்கை ஜில்லென்று தலையில் அப்ளை செய்யக்கூடாது கொஞ்சநேரம் குளிர்ச்சி அடங்கியதும் ஹேர் பேக்கை தலையில் போட்டுக் கொள்ளுங்கள்.) உங்களுக்கு இந்த ஹேர் பேக் பிடித்திருந்தால் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -