புத்திசாலி இல்லத்தரசிகள் இப்படித்தான் யோசிப்பாங்க. கூடை கூடையாய் இருக்கும் அழுக்கு துணிகளில், கை வைக்காமல் பளிச்சென்று வெள்ளையாக மாற்ற சூப்பர் ஐடியாங்க இது.

cloth5
- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய வேலை, பெரிய தலைவலி என்னவென்றால் துணி துவைப்பது. வாஷிங் மெஷின் இருந்தால் கூட அதில் போட்டால் அழுக்கு போக மாட்டேங்குது என்று சொல்லி துணிகளை கையில் துவைக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். துணிகளில் படிந்திருக்கும் விடாப்பிடியான அழுக்குகளை கூட கைப்படாமல் நீக்குவதற்கு ஒரு எளிமையான ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஐடியாவை கையில் துணி துவைப்பர்களும் பயன்படுத்தலாம். வாஷிங் மெஷினில் துணி துவைப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாங்க அந்த ஸ்மார்ட் ஐடியாவை நாமும் தெரிந்து கொள்வோம். இந்த பதிவில் இறுதியில் கூடவே சேர்த்து போனஸ் ஐடியாவாக முட்டை ஆம்லெட் எளிமையாக போடுவது எப்படி என்பதை பற்றிய பயனுள்ள குறிப்பும் உங்களுக்காக.

குறிப்பு 1:
முதலில் துணி துவைப்பதற்கான ஐடியாவை பார்த்து விடுவோம். தேவையான அளவு டப்பில் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல் உப்பு 1 கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விட், அழுக்கு துணிகளுக்கு தேவையான அளவு போட்டு உங்கள் கையை வைத்து நன்றாக இந்த தண்ணீரில் கலந்து விட வேண்டும். அடுத்து ஒரு சின்ன கப்பில், 1 கப் அளவு மட்டும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் பேஸ்ட் 1 ஸ்பூன் போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக கரைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பேஸ்ட் தண்ணீரை தயாராக வைத்திருக்கும் சோப்பு தண்ணீரில் ஊற்றி கலந்து விடுங்கள். அவ்வளவுதான். இந்த தண்ணீரில் அழுக்கு துணிகளை நன்றாக பிரித்து நனைத்து 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். காலரில் இருக்கும் அழுக்கு கூட முழுமையாக நீங்கிவிடும்.

பிறகு துணி துவைக்க நீங்கள் சோப்பு போட வேண்டாம். பிரஷ் கூட போட வேண்டாம். தேவைப்பட்டால் அப்படியே துணிகளை எடுத்து கும்மிக்கி அலசி காய வைத்தாலே துணிகள் பளிச் பளிச்சு என மாறும். சரி, நாங்க கையில் துணி துவைக்க மாட்டோம் என்றால், இதேபோல தேவையான அளவு தண்ணீரில், கல் உப்பு, டிடர்ஜென்ட், பேஸ்ட், கலந்த தண்ணீரை ஊற்றி கலந்து அந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து, ஊறவைத்த துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து எடுத்து பாருங்கள். கையில் துவைத்த மாதிரியே துணிகள் வெண்மையாக இருக்கும். காலரில் இருக்கும் அழுக்கு கூட சுத்தமாக நீங்கிவிடும். இது ஒரு எளிமையான குறிப்பு தான். உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். துணி துவைக்க கூடிய பாரமான பெரிய வேலை சுலபமாகும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஆம்லெட் போடுவதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ். இப்போது நாம் எல்லோர் வீட்டிலும் இந்த வெஜிடபிள் கட் பண்ணும் சாப்பர் இருக்கிறது. அதன் உள்ளே பாதி வெங்காயம், பாதி பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி தழைகளை போட்டு, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் போட்டு, விடுங்கள். (தோலுரித்து வெங்காயத்தை கூட இரண்டாக வெட்டி போட்டுக் கொண்டால் போதும்.) இப்போது வழக்கம் போல சாப்பரை நான்கு முறை இழுத்து விடுங்கள். முட்டையை அதுவே பீட் செய்து கொள்ளும். வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாயை அதுவே சாப் செய்து சூப்பராக முட்டையை அடித்துக் கொளுத்து விடும்.

இதை கடாயில் ஊற்றி ஆம்லெட் போட்டால் புசுபுசு ஆம்லெட் நமக்கு கிடைக்கும். கையில் அடித்து போட்ட ஆம்லெட்டை விட இதனுடைய சுவை கூடுதலாக கிடைக்கும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாளி வந்து விட்டார்கள் என்றால் மூன்று முட்டை வரை இதில் சேர்த்து, மூன்று ஆம்லெட் போடலாம். ஆம்லெட் போடக்கூடிய வேலை சுலபமாக முடிந்தது. உங்களுக்கு இந்த பயனுள்ள குறிப்பு பிடித்திருந்தால் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கணும்.

- Advertisement -