சிவபெருமானின் புகழை இதை விட எப்படி தெளிவாக கூற முடியும் – வீடியோ

Sivan
- Advertisement -

உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழியென்று கூறுவார்கள். உலகின் பல மொழிகள் நம் தமிழ் மொழி தோன்றிய காலத்தில் தோன்றியிருந்தும் இன்று அம்மொழிகளில் பல வழக்கொழிந்து போயிருக்கிறது. ஆனால் இதனை நூற்றாண்டு காலம் பல வகையான சோதனைகளைத் தாண்டி இன்றும் நம் தமிழ் மொழி உயிர்பெற்றிருப்பது, அம்மொழிக்கென்று இருக்கும் ஆன்மிகச் சக்தி காரணமாக இருக்கலாம். திருவாசகத்தில் வரும், “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தாள் இதன் உண்மை நிலை புரியும். இதோ அது குறித்த வீடியோ.

- Advertisement -

திருவாசகத்தில் வரும், “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தாள் இதன் உண்மை நிலை புரியும். இதோ அது குறித்த வீடியோ.

ஆன்மிகச் சக்தி அதிகம் கொண்டிருக்கும் தமிழ் மொழியில், அந்த ஆன்மிகச் சக்தியை நம் மக்களிடம் பாய்ச்ச தெய்வத் தன்மை கொண்ட பல புலவர்கள், பல நூற்றுக்கணக்கான பாடல்களையும், நூல்களையும் இயற்றியிருக்கின்றனர். அப்படிப்பட்ட தெய்வத்தன்மை வாய்ந்த நூல்களில் ஒன்று தான் “திருவாசகம்”.

- Advertisement -

“திருவாசகத்திற்கு உருகாதவர், வேறெந்த வாசகத்திற்கும் உருகார்” என்ற வாக்கியம் திருவாசகத்தின் அற்புதமான தெய்வீ கத்தன்மையை எடுத்துக் கூறுவதாகும். நம் நாடு புலவர்கள், அறிஞர்களின் சிறப்பே அவர்கள் உலகின் எல்லா நாடு, இன, மொழி, மத வேறுபாடு கொண்ட மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கருத்துக்களையும், தத்துவங்களையும் போதிப்பது தான்.

அந்த வகையில் “உலகப் பொதுமறையென்று” போற்றப்படும் “திருக்குறள்” நூலுக்கு அடுத்து உலகத்தோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை கொண்ட ஒரு தெய்வீக நூல் “திருவாசகம்” ஆகும். இன, மொழி, மத வேறுபாடுகளால் உலகெங்கிலும் மக்கள் அமைதியை இழந்து தவிக்கும் இன்றைய காலத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் “திருவாசகம்”.

- Advertisement -