சூரிய பெயர்ச்சியால் யோகம் பெரும் ராசிகள்

suriya peyarchi
- Advertisement -

நவகிரகங்களின் தலைவனாக போற்றப்படுபவர் தான் இந்த சூரிய பகவான். அது மட்டுமின்றி கோள்களின் தலைவனாகவும் விளங்க கூடியவர் இவர் தான். இவர் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். அத்தகைய மாற்றம் நவகிரகங்களிலே முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.

அந்த வகையில் இன்று நவம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் 12 ராசிகளில் நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜ யோகத்தை வாரி வழங்க இருக்கிறார். சூரிய பகவான் பெரும்பாலும் 12 ராசிக்காரர்களுக்கும் நன்மை தீமைகளை வாரி வழங்குவதில் பாராபட்சம் இன்றி தருவார். அந்த வகையில் இந்த பெயர்ச்சியின் மூலம் நன்மை அடையக் கூடிய அந்த ராசிக்காரர்களை யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷ ராசி

சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அந்த அளவிற்கு உங்களுடைய முயற்சியும் அமையும் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்கது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிப்பதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

கும்ப ராசி

இந்த மாதம் சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி இறைக்க போகிறார். வேலை செய்யும் இடத்தில் மிகப் பெரிய வெற்றி வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது. நண்பர்களால் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும். எதிரிகள் மூலம் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும். பணம் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும்.

- Advertisement -

கன்னி ராசி

சூரிய பகவானின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களும் பலவிதமான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இதனால் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை காணப் போகிறார்கள். அதற்கான பல்வேறு வாய்ப்புகள் உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மற்றவர்களுக்கு உங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய காலம் இது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

சிம்ம ராசி

இந்த ராசிக்காரரின் அதிபதியாக விளங்குபவரே சூரிய பகவான் தான். இவருடைய இடமாற்றத்தினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சதாதகமான சூழ்நிலை ஏற்பட போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்க கூடிய காலக்கட்டம் இது. மற்றவர்களிடத்தில் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவீர்கள். நீண்ட காலம் வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் திடீர் பணவரவு உங்களை ஆச்சரியத்தில் முழ்கடிக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழில் விருத்தியாக பரிகாரம்

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சூரிய பெயர்ச்சியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையே. கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப இதை மாற்றங்களுக்கு உட்பட்டவை தான். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -