ஞாயிற்றுகிழமைகளில் சொல்லவேண்டிய சூரிய தோஷ நிவர்த்தி மந்திரம்

Suriyan-manthiram

நம்முடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் வழிவகுப்பார்கள் நவகிரகங்களே என்று கூறப்படுகிறது. நவகிரகங்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார் சூரிய பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய வலுகுன்றி இருந்தால், தந்தை வழி உறவுகளில் சிக்கல், பூர்வீக சொத்தில் சிக்கல், உடல் ஆரோக்கியத்தில் சிக்கல், அரசு துறை மூலமாக சிக்கல், திருமணம் நடப்பதில் தாமதம் இப்படி பல இன்னல்கள் ஏற்படும். ஆகையால் ஜாதகத்தில் சூரியன் வலுகுன்றி இருப்பவர்கள் கட்டாயம் சூரிய பகவானை வழிபடுவது அவசியம். சூரியனுக்கு ஞாயிறு என்றொரு பெயர் இருப்பது நாம் அறிந்ததே. ஆகையால் ஞாயிற்று கிழமைகளை சூரிய பகவானை வழிபடுவது சிறப்பு சேர்க்கு. அந்த வகையில் சூரியனை வழிபடும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம் இதோ.

suriyan

மந்திரம்:
தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!
தேஜோமயம் பாஸ்கரம்!!
பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!
ஜ்யோதிர்மயம் சங்கரம்!!
ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!
த்ரைலோக்ய சூடாமணீம்!!
பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!
மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!

இதையும் படிக்கலாமே:
தெய்வீக சக்தியை பெற உதவும் மந்திரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சூரியபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை கூறுவதன் பயனாக சூரிய பகவானின் அருளை பெறலாம். அதோடு சூரிய தோஷம் நீங்கும் . தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு சூரியபகவானை வணங்கி இந்த மந்திரத்தை ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும். சூரிய தோஷம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக வாழ்வில் நல்ல வளங்களை பெறுவர்.