உங்களுக்கு தெரியாத தஞ்சை பெரியகோவிலின் வியக்கவைக்கும் மர்மங்கள். இதோ

sivarathiri-poojai

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் நம் பாரம்பரியம் மற்றும் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் அறியப்படாத மர்மங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

Thanjai periya kovil

 

அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலும் வரலாற்றை சுமந்து கொண்டு இருக்கின்றது தஞ்சை பெரியகோவில். உலகத் தமிழர்களையும், பிரமிக்க வைக்கும் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த அதிசயம் மறைத்து வைத்திருக்கும் மர்மங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கின்றன. முதலில் அதன் வரலாற்றையும், கட்டுமானத்தையும் பற்றி தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பெருமையை சுமந்து நிற்கும் இந்த ஆலயம் சோழ சாம்ராஜ்யம் அதன் அதிகாரம் உச்சத்தில் இருந்தபோது பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆயிரத்தி நான்காம் ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாகும்.

 

வானத்தை நோக்கி கூரையாக அமைந்து இருக்கும் இதன் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்கள் இது வரை கெடாமல் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. சோழர்களின் கோவில்களில் நிலைநிறுத்தப்பட்ட லிங்கங்கள் தொடர்ந்து சக்தி மற்றும் அதன் அடைந்ததும் இதன் பின்னணியில் தான் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம், தாண்டி அந்த கல்லை கோபுரத்தின் உச்சியில் ஏற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியாதவாறு இருக்கிறது. கோவிலின் சிற்பங்களில் பல முனிவர்களின், உருவங்களும் இந்துக் கடவுள்களின் சிலைகளும் மற்ற புராணக்கதைகளில் இடம்பெற்று நிகழ்வுகளும் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

Nanthi

 

பெரிய கோவிலின் கோபுர உச்சியில் கல்லாக அமைந்திருக்கும் 81 டன் எடையுள்ள கல்லை தஞ்சை பெரிய கோவில் அதன் அடிமட்டத்திலிருந்து 216 அடி உயரம் கொண்டது. 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்தில் எப்படி எடுத்து இருப்பார்கள் என்பதற்கு இதுவரை நமக்கு பதில் தெரியாமலே இருக்கின்றது. கோவில் உச்சியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தற்காலிகமாக பிரம்மாண்டமான பாதை அமைத்து யானைகளின் உதவியால் கல்லை வைத்திருக்கலாம். ஆனால் யானைகளின் சுபாவம் குறித்து பலரால் அறியப்படாத ஒற்றுமை உள்ளது. யானைகளால் அதிக எடையுள்ள பொருட்களை பலமைல் தூரத்திற்கு சுமக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அவைகள் பல அடி உயரம் ஏறும்போது ஏறி அதிலிருந்து கீழே வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் அந்த யானைகள் மிரண்டு போய் மேற்கொண்டு ஏறவே ஏறாது என்பது தான் உண்மை. அப்படி இருந்தும் இந்த கோபுரத்தின் மேல் எப்படி எடுத்து சென்றிருப்பார்கள் என்று தெரியாமலே இருக்கின்றது.

இதையும் படிக்கலாமே:
சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்.இதோ

English overview:
Here we have Surprising Mysteries of Thanjavu Periya in tamil. We have details of Surprising Mysteries of Thanjavu Periya too.