உங்களுக்கு சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட இவற்றை செய்யுங்கள்

surya

விண்ணில் இருக்கும் அனைத்து கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் முதன்மையானதாக இருப்பது சூரியன் ஆகும். ஜாதகத்தில் இந்த சூரியன் சிறப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால் சூரிய கிரகம் ஜாதகத்தில் சரியான அமைப்பை பெறாவிட்டால், அந்நபருக்கு சூரிய தோஷம் உண்டாகிறது. இந்த சூரிய தோஷம் ஏற்படும் காரணம் குறித்தும், அதற்கான பரிகாரம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

suriyan

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் கிரகத்திற்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் இருந்தாலும், சூரியனுக்கு பகையாக கிரக வீடுகளில் இருந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெறாமலும் இருக்கும் பட்சத்தில் சூரிய தோஷம் இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் ஒருவரின் தந்தைக்குரிய கிரகம் ஆகிறார். முற்பிறவியில் தந்தையை சரியாக கவனித்து கொள்ளாதவர்கள், தந்தையை அவமானப்படுத்தியவர்கள் போன்றோர் தந்தையின் சாபம் காரணமாக சூரிய தோஷத்தை அடைகின்றனர்.

சூரிய தோஷம் அடைந்த நபர்கள் குடும்பத்தில் தந்தை மற்றும் மகன்களுக்கிடையே எப்போதும் பிரச்சனைகள் ஏற்பட்டவாறு இருக்கும். இந்த தோஷம் கொண்ட நபர்கள் எலும்பு மற்றும் பல் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவர். மிக இள வயதிலேயே கண் பார்வை குறைபாடுகள் ஏற்படும் நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படுவது தாமதமாகும்.

Suryan God

தங்களின் ஜாதகத்தில் சூரிய தோஷம் இருப்பதை அறிந்த நபர்கள் சூரிய தோஷங்கள் நீங்க வருடத்திற்கொருமுறை தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். சூரிய தோஷம் அடைந்திருக்கும் ஜாதகர்கள் தங்களின் தந்தையை முறையாக பராமரித்து அவரின் மனம் மகிழ செய்வதால் சூரிய தோஷம் நீங்கி, சூரிய பகவானின் நல்லருள் கிட்டும்.

- Advertisement -

Suriyan manthiram

குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக கொடுப்பது சூரிய தோஷம் போக்கும் ஒரு சிறப்பான பரிகாரம் ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ பெருமானுக்கு கோதுமை தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் வைத்து சூரியனையும், சிவபெருமானையும் வணங்குவதால் சூரிய தோஷம் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் புதன் இப்படி இருந்தால் ஓகோ வாழ்க்கை தான்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya bhagavan remedies in Tamil. It is also called as Surya bhagavan pariharam in Tamil or Surya dosha in Tamil or Suriyan valipadu in Tamil or Surya graha dhosham neenga in Tamil.