சூரிய பகவான் ஸ்லோகம்

Suriyan-manthiram
- Advertisement -

தினந்தோறும் பூமிக்கு கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் அக்னி நட்சத்திரமான சூரியன் இந்த உலகிற்கு ஒளி மட்டுமன்றி எல்லா வகையான உயிர்களுக்கும் ஒரு வகையான சக்திவாய்ந்த ஆற்றலை தருகிறது. தாந்திரீக ரீதியாக பார்க்கும் போது நமது கண்பார்வைக்கு சக்தி தரக்கூடியவராகவும், உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துபவராகவும் இருக்கிறார். இப்பலன்களை பெற சூரியனை போற்றும் இத்தமிழ் ஸ்லோகத்தை கூறி வழிபட வேண்டும்.

suriyan

சூரிய பகவான் ஸ்லோகம்

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

- Advertisement -

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ் ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் உறுதிபெறும்.

Suriya puyal

இப்பூமி மற்றும் விண்ணில் இருக்கும் பிற கிரகங்களும் சூரியனை குறிப்பிட்ட ஒரு வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. சூரியன் ஒரு நெருப்பு கோளம் என்றாலும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பம் மற்றும் ஒளி பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமாக இருக்கிறது என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இவ்வுண்மையை பழங்காலத்திலேயே அறிந்த நம் முன்னோர்கள் உலகிற்கு வாழ்வளிக்கும் சூரியனை சில தெய்வீக அதிர்வுகளை உண்டாக்கும் மந்திர வார்த்தைகளை கொண்டு துதித்து, தங்களின் பல பிரச்சனைகளை தீர்த்தனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

இது போன்ற மேலும் பல ஸ்லோகங்கள் ஆன்மீக தகவல்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya Bhagavan slokam in Tamil. It can also be called as Surya Bhagavan slogam in Tamil. By chanting this Surya Bhagavan slokam one can get away from the disease.

- Advertisement -