வசதியான வீடு, அதிக பூமி லாபம் ஏற்பட உங்கள் ஜாதகத்தில் இவை இருக்க வேண்டும்

chandra

மற்ற கலைகளை போல் அல்லாமல் ஜோதிடக் கலையை எடுத்தோம், கவிழ்த்தோம் என விரைவான முறையில் கற்றுக் கொள்ள முடியாது. குருபக்தியும், மிகுந்த பொறுமை, அனைத்து விடயங்களிலும் சீராக ஆராயும் திறன் ஆகியவை ஜோதிட கடையில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மக்களுக்கு கணிக்கப்படும் ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் கிரகங்களின் தசாகலாம் அல்லது திசைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் இங்கு சூரியனின் திசை காலத்தில், சந்திரன் புக்தி ஏற்பட்டால் ஒருவருக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Suryan God

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் தசை அல்லது திசை என்பது ஒவ்வொரு கிரகமும் ஜாதகரின் வாழ்வில் தாக்கத்தை செலுத்தும் கால அளவாக இருக்கிறது. புக்தி என்பது ஒரு கிரகத்தின் திசை காலங்களில் நவகிரகங்களும் வரிசைப்படி வந்து அதன் ஆதிக்கத்தை செலுத்தும் காலம் ஆகும். பொதுவாக எந்த கிரக திசை நடக்கிறதோ அந்த கிரகத்தின் புக்தியே முதலில் நடைபெறும். உதாரணமாக சூரிய திசை ஒருவருக்கு நடைபெறும் பட்சத்தில் அவருக்கு முதல் புக்தியாக சூரிய புத்தி உண்டாகிறது. இங்கு சூரிய திசை நடைபெறும் போது சந்திர புக்தி ஏற்பட்டால் ஏற்படும் பலன்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக நவக்கிரகங்களில் சூரியனுக்கு நட்பு கிரகமாக இருப்பவர் சந்திர பகவானாவார். சூரிய திசை காலத்தில் சந்திர புக்தி நடைபெறும் போது, அந்த ஜாதகருக்கு சிறப்பான முறையில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் அழகானவராகவும், அன்பானவராகவும் இருப்பார். அந்த வாழ்க்கைத்துணை வழியாகவே சிலருக்கு தனலாபம் ஏற்படும். வசதியான வீடு அமையும். நன்மக்கள் பேறு கிடைக்கப் பெறுவார்கள்.

chandra bagavan

சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம் என்பதால் சூரிய திசை காலத்தில் சந்திர புக்தி நடைபெறும் போது பெரும்பாலானோருக்கு பெண் குழந்தை பிறக்கும் யோகம் அமைகிறது. எதிர்பாராத வகையில் மிகுதியான பணவரவுகள் ஏற்படும். சிலருக்கு பூமி, மனை லாபங்கள் அதிகம் உண்டாகும். வியாபாரங்களில் சிறந்த வளர்ச்சியும் அதிக லாபமும் கிடைக்கப் பெறுவார்கள். அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நட்பும் அவர்களால் தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். பொதுவாக இந்த சூரிய திசை காலத்தில் நடைபெறும் சந்திர புக்தியால் மன மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் இது இருந்தால் சிறப்பான பலன் நிச்சயம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya dasha chandra bhukti in Tamil. It is also called as Surya Thisai in Tamil or Chandra bhukti in Tamil or Jathaga palangal in Tamil or Jathagathil thisaigal in Tamil.