நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேற செய்யும் மந்திரம் இதோ இதோ

vinayagar

அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரியனை தரிசித்து வணங்குபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பது நமது நாட்டின் சித்தர்களும், யோகிகளும் கூறியிருக்கின்றனர். எந்த ஒரு வழிபாட்டிற்கும் முன்பாக முழு முதல் கடவுளாக இருக்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்குவதால், அவை நமக்கு முழுமையான பலன்களைத் தரும். அப்படி சூரியனின் அம்சம் கொண்ட சூரிய ரூப கணபதி மந்திரம் இதோ.

vinayagar

சூரிய ரூப கணபதி மந்திரம்

சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

நவகிரகங்களில் சூரியனின் தன்மையைக் கொண்ட சூரிய ரூப கணபதி கூறிய எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்ததும் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சூரியனைப் பார்த்தவாறு, கணபதியை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை குறைந்தது 1008 முறை உரு ஜெபிப்பதால் உடலில் கண், எலும்புகள் சம்பந்தமான நோய்கள் நீங்கும். பணிகளில் பதவி உயர்வும், உயரதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். மன வலிமை பெருகும். ஆயுள் அதிகரிக்கும்.

Suryan God

சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் என்று ஒரு பழமொழி கூறப்படுவதுண்டு. அந்த சூரியனை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் எத்தகைய துன்பங்களும் நீங்கும். அந்த சூரியனின் அம்சத்தை கொண்டிருக்கும் சூரியரூப வக்ரதுண்ட கணபதியின் இந்த எளிய மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனைப் பார்த்தவாறு துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு உரியது தடை தாமதங்களின்றி கிடைக்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya ganapathy mantra in Tamil. It is also called as Ganapathi mantras in Tamil or Kariya thadai neenga in Tamil or Vinayagar slokas in Tamil or Manavalimai pera in Tamil.