2020 ஜூன் 21 வரப்போகும், சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது? பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

surya-grahan
- Advertisement -

2020 ஜூன் 21 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய கிரகணம் ஏற்பட போகின்றது. இது நாம் எல்லோரும் அறிந்தது தான். குறிப்பாக இந்த சூரிய கிரகணம் நிகழப்போகும் நேரம் என்ன? சூரிய கிரகத்தால் பாதிக்கப்படும் ராசி நட்சத்திரங்கள் எவை? கிரக தோஷத்தால் பாதிக்காமலிருக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Gemini zodiac sign

ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.22 மணியிலிருந்து மதியம் 1.45 வரை சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது. இந்த சூரிய கிரகணமானது மிகப்பெரிய  கிரகணம் என்று, ஜோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. 639 வருடத்திற்கு முன்பாக இப்படி ஒரு கிரகணம், நம் பூமியில் நடந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இந்த கிரகணத்தின் போது, சூரியன் மிதுன ராசியில் இருக்கின்றார். ஆகவே, மிதுன ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் திருவாதிரை, மிருகசிரிஷம் இந்த இரண்டு நட்சத்திரகாரர்களுக்கும் கிரகதோஷம் உள்ளது. இதனால், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தால் திருவாதிரை, மிருகசீரிஷம் நட்சத்திரம் கொண்டவர்கள் உங்களது ஜாதகத்தை, கொண்டுபோய், உங்கள் குடும்ப ஜோசியரிடம் காட்டி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. பயமுறுத்துவதற்காக சொல்லப்படுவதில்லை. தோஷம் தாக்காமல் இருக்க முன்கூட்டியே பரிகாரம் செய்து கொள்ளலாம்.

Grahanam

இதுதவிர புனர்பூசம், ரோகிணி, சதயம், பூரட்டாதி, சுவாதி இந்த நட்சத்திரகாரர்கள் சூரிய கிரகணம் முடிந்த உடன் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மிதுன ராசியை சேர்ந்தவர்களும், மேற்குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் கோதுமையை தானமாகக் கொடுப்பது சிறந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. கோதுமையோடு சேர்த்து மட்டை தேங்காயையும் தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

இந்த கிரகண காலத்தில் குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் குறிப்பிட்ட இந்த கிரகண நேரத்தில், தண்ணீர் கூட குடிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முடிந்தவரை எல்லோருமே கிரக நேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால் நல்லது.

hanuman-sivan

கிரகணம் முடிந்த உடன் உங்கள் வீடுகளை சுத்தமாக துடைத்து விட்டு, அதன் பின்பாக தலைக்கு குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது நல்ல பலன் தரும். குறிப்பிட்ட இந்த கிரகண நேரத்தில், அனுமனையும், சக்திவாய்ந்த அம்மனையும், சிவபெருமானையும் வழிபடலாம். கிரகண நேரத்தில் மனதார ‘ஓம் நம சிவாய’ ‘ஸ்ரீ ராம ஜெயம்’ ‘ஓம் சக்தி’ இப்படிப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதால் எந்த கிரக தோஷமும் நம்மை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு படாதபாடு பட்ட ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது! எந்த ராசின்னு தெரிஞ்சிக்கனுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya grahan 2020 june in Tamil. Surya grahan 2020 Tamil. Surya grahan 2020 june 21. Surya grahan 2020 june 21st. Surya grahan 2020 21 june.

- Advertisement -