சென்ற கிரகணத்தில் வேகமெடுக்க தொடங்கிய ‘கொரோனா’ நாளைய கிரகணத்தில் குறையும்! என்று அடித்து கூறுகிறார்கள் ஜோதிடர்கள். என்ன காரணம் தெரியுமா?

astro-grahanam
- Advertisement -

கடந்த விகாரி வருடத்தில் 26\12\2019 ஆம் திகதியில் ‘சூரிய கிரகணம்’ ஏற்பட்ட போது உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பெரிய துன்பத்தை சந்தித்தனர். இன்று வரையிலும் அதன் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு ஜோதிட ரீதியாக விளக்கம் அளிக்கின்றனர் ஜோதிடர்கள். சென்ற கிரகணத்தின் போது இருந்த கிரக நிலையில் நவ கிரகங்களில் ஒரு கிரகம் கூட ராகு-கேது கோள்களை தாண்டி செல்லவில்லையாம். ராகு-கேது மற்ற அனைத்து கிரகங்களையும் தன்னுள் அடக்கியது என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் ‘கால சர்ப்ப தோஷம்’ ஏற்பட்டது. எனவே உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது நியதி என்றானது. இதன் தாக்கம் எப்போது குறையும்? தோஷ நிவர்த்தி ஆவது எப்போது? மீண்டும் உலகம் பழைய நிலைக்கு மீளுமா? இந்த கேள்விகளுக்கான விடைகளை இப்பதிவில் இனி காணலாம் வாருங்கள்.

rahu-ketu

ராகு மற்றும் கேதுவிற்கான தனித்துவமான குணங்கள் என்ன தெரியுமா? கேதுவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நமக்கு நேரடியாக தெரிவதில்லை. அதேபோல் ராகுவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் சாதாரணமாக இருக்கக் கூடியவை அல்ல. மிகவும் வலிமையானவை. கேதுவை விட ராகு அதிக பாதிப்புகளை தரக் கூடிய கிரகமாக விளங்குகிறது. இவ்விரண்டு கிரகங்களின் ஆதிக்கம் சென்ற டிசம்பரில் நிகழ்ந்த கிரகணத்தின் போது வலுவாகியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாம் சற்று யோசித்து பார்த்தால் இதில் இருக்கும் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். சரியாக டிசம்பரில் தான் நோய்த் தொற்று தொடங்கியது. இதன் மூலம் கிரகணத்தின் நிலை தன்மையில் கிரகங்களின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின் நோய் தொற்று வேகமும் தீவிரமாகியது உணரமுடிகிறது. அதேபோல் நாளை நிகழவிருக்கும் கிரகணத்தின் நிலை தன்மையினால் மாறக்கூடிய கிரகங்களின் ஆட்சி மாற்றம் என்னென்ன செய்யும்? நன்மை செய்யுமா? அல்லது தீமை செய்யுமா? என்பதை தெரிந்து கொள்வோம்.

Planets

நவகிரகங்களில் தலைமை இடம் வகிப்பது சூரியன் கிரகம் தான். சூரியனே தன் பலத்தை இழந்து ராகு கேதுவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார். நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணம் மற்ற சூரிய கிரகணம் போன்று சாதாரண சூரிய கிரகணம் அல்ல. மிகவும் சக்தி வாய்ந்த சூரிய கிரகணம் ஆக இருக்கிறது. சுமார் 639 வருடங்களுக்குப் பிறகு இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 10.22 மணியிலிருந்து மதியம் 01.42 மணிவரை நீடிக்க இருக்கும் இந்த சூரிய கிரகணம் உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தும் என்று அடித்துக் கூறுகிறார்கள் ஜோதிடர்கள்.

- Advertisement -

இதுவரை நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் யாவும் ராகு கேதுவின் பிடியில் இருந்ததால் உலகம் பல இக்கட்டான சூழ்நிலையில் ஸ்தம்பித்து நின்றது. நாளை சூரிய கிரகணம் முடிந்த பின்பு ராகு கேதுவின் பிடியில் இருந்து சூரிய பகவான் வெளியேறுகிறார். சூரியன் மீண்டும் தன் பலத்தை பெற இருப்பதால் பல நன்மைகள் உலகிற்கு நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள். குறிப்பாக நோய் தொற்றுகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெற முடியும் என்கின்றனர்.

Sooriyan

ஆடி மாதத்தில் ராகு கேதுவின் பலம் குறைய இருப்பதால் நோய்தொற்று கிருமிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எந்த அளவிற்கு ராகு-கேது தன் பலம் இழக்குமோ! அதே அளவிற்கு நோய் தொற்றும் தன் பலமிழக்கும். இதன் மூலம் சரியான மருந்துகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு மீண்டும் மக்கள் பழைய நிலைக்குத் திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரகணத்திற்கு பிறகு சூரியனே அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு அளிப்பார்.

- Advertisement -

Grahanam

நாளை கிரகண தோஷம் ஏற்படாமல் இருப்பதற்கு வீட்டிலேயே விளக்கேற்றி, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். குடை, செருப்பு மற்றும் விசிறி சூரியனின் அம்சம் பொருந்திய பொருட்களாக ஜோதிட சாஸ்திரம் கூறுவதால் இந்த பொருட்களை தானமாக அளித்து சூரிய பகவானின் அருள் பெற வேண்டும். இனி வரும் நாட்களில் சூரியன் நோய் தீர்க்கும் மருந்தாக செயல்பட இருக்கிறார். எனவே அவரை வழிபடுவதன் மூலம் மக்கள் நிம்மதி அடையலாம். சூரிய பகவானை வழிபடுவோம் பலன் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
ஜூன் மாத சூரிய பெயர்ச்சி, எந்த ராசிக்கு எந்தப் பலனை தரப்போகிறது? 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான பலன்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya grahan astrology in Tamil. Surya grahan eclipse astrology predictions. Surya grahan vedic astrology. Surya grahan 2020 astrology. Surya grahan june 2020 astrology.

- Advertisement -